அதிநவீன மொபைலை விரும்பும் மக்கள்

மொபைல் போன் என்பது இன்றைய நாகரீக உலகில் அனைவருக்கும் ஒரு அத்தியாவசியப் பொருளாகி விட்டது என்றே கூறலாம்.

அந்த அளவுக்கு மொபைல் அவசியமாகி விட்டாலும், அந்த போன்கள் தொழில்நுட்ப மேம்பாட்டுடனும், கையடக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் கிளைகளை விரிவடையச் செய்து வரும், தற்காலத்தில் புதிய செல்போன் தயாரிப்பாளர்களும் அதிகரித்து வருகிறார்கள். தொழில்நுட்ப நிபுணர்களுக்கு ஏற்ற வகையில் சிறிய, அதிநவீன செல் சாதனங்களை (ஹேண்ட்செட்) உருவாக்குவதில் புதிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடனும், சிறிய-கையடக்கமானதாகவும் உள்ள செல்போன்களையே சிறியவர்கள் முதல் நிபுணர்கள் வரை பலரும் விரும்புகிறார்கள்.

அதுபோன்ற போன்களுடன் வாங்குவதற்கு ஏற்ற விலையிலும் செல்போன்கள் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.

எனவே புதிய செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து, உருவாகிக் கொண்டேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply