செல்போன் தயாரிப்பில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ள நோக்கியா நிறுவனம், தனது ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவதற்காக பல மில்லியன் யூரோ மதிப்புள்ள அவுட்-சோர்ஸிங் ஒப்பந்தத்தை, இந்திய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான டிசிஎஸ்-க்கு வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி பின்லாந்து நிறுவனமான நோக்கியா சீமென்ஸ்-ன் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கு தேவையான மென்பொருள் தீர்வைகளை வழங்க டியுசெல்டோர்ப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச குழுவில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தை சேர்ந்த 90 பணியாளர்கள் இணைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் டிசிஎஸ் பணியாளர்களுக்கு சர்வதேச குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படும் அனுபவம் கிடைக்கும் என நோக்கியா சீமென்ஸ் நிறுவனத்தின் வர்த்தக மென்பொருள் மற்றும் இயக்கப் பிரிவின் தலைவர் ஜுஹானி ஹின்டிக்கா தெரிவித்துள்ளார்.