குறைந்த விலை கணினிக்கு நவீன ‘சிப்’

சிப் தயாரிப்பில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ள இன்டெல் நிறுவனம், குறைந்த விலை தனிநபர் கணினிகளுக்கான (personal computers), மிகச் சிறிய, அதே சமயம் அதிக சக்தி வாய்ந்த புதிய ‘சிப்’களை உள்ளடக்கிய பிராசசரை தயாரித்துள்ளது.

புதிய பிராசசருக்கு ஏட்டம் (Atom) என பெயரிட்டுள்ள இன்டெல் நிறுவனம், குறைந்த மின்சாரத்தில் இயங்கும் என்பதால், இன்டெல் தயாரிக்க உள்ள புதிய கணினிகளில் இவை பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 25 சதுர மி.மீ பரப்பளவு மட்டுமே உள்ள இந்த ஏட்டம் பிராசசரில், 47 மில்லியன் டிரன்சிஸ்டர்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக இன்டெல் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

உலகளவில் மிகச் சிறிய பிராசசராக கருதப்படும் ‘ஏட்டம்’, சிப் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என இன்டெல் நிறுவன துணைத்தலைவர் சீன் மலோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

No comments yet.

Leave a comment

(required)

(required)