சர்வதேச கணினி சந்தையில், மெல்லிய மடிக்கணினியை (Thinnest laptop) அறிமுகப்படுத்தி புதிய புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவனத்திற்கு சவால் அளிக்கும் விதமாக, அதே போன்றதொரு மெலிதான மடிக்கணினியை லெனோவா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
சீன நிறுவனமான லெனோவா அறிமுகப்படுத்தியுள்ள ThinkPad X300 மடிக்கணினியின் எடை 2.93 பவுண்ட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 யுஎஸ்பி போர்ட்கள் மற்றும் டிவிடி ரைட்டர் வசதியை லெனோவா மடிக்கணினி கொண்டிருப்பது, கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய மேக்-புக் ஏர் (MacBook Air) மடிக்கணினியில், டிவிடி ரைட்டர் வசதி கிடையாது என்பதும், ஒரு யுஎஸ்பி போர்ட் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் விற்பனை விலை 2,799 முதல் 2,935 டாலருக்குள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
