நகைச்சுவைதான் என்னை பிரபலமாக்கியது - வடிவேலு

905e1d67dca374fccf2eb868d4938e.jpg6ca2463b8d3ba94acdd25250bde264.jpg

 

நகைச்சுவை நடிகர்களில் அசுரத்தனமாக முன்னேறி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையே வசீகரித்து வைத்திருப்பவர் வடிவேலு. காமெடியனாக கலக்கி வந்தவர் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்துக்குப் பிறகு கதாநாயகனாகவும் வெற்றி பெற்று விட்டார். இப்போது இவர் ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ படத்தின் நாயகன். அவருடன் ஒரு சந்திப்பு….

‘இம்சை அரசன்’, ‘இந்திரலோகத்தில் அழகப்பன்’ படங்களுக்குப் பிறகு இனி கதாநாயகனாகத்தான் நடிப்பீர்களா?

நான் என்றுமே காமெடியன்தான். எனக்கு காமெடியனாக நடித்துதான் இந்த பெயரும் புகழும் கிடைத்தது. அதை என்றைக்குமே நான் மறக்க மாட்டேன். நான் கதாநாயகனாக நடித்தது, நடிப்பது எல்லாமே நானாக தேடிப் போனது கிடையாது. என்னை இழுத்துக் கொண்டு போய் தள்ளிவிட்டு விட்டார்கள் என்று தான் சொல்வேன்.

‘இம்சை அரசன்’ படத்தில் நடித்த போதும் பயந்து கொண்டுதான் நடித்தேன். அது எப்படி ஓடும். ஏற்றுக் கொள்வார்களா என்ற பயம் நடித்து முடித்த பிறகும் இருந்தது. படம் வெற்றி பெற்ற பின்புதான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

முதல் படம் வெற்றி பெற்றுவிட்ட பின்பு `இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ படத்தில் தைரியமாக ஒப்புக் கொண்டீர்களா?

முதல் படம் வெற்றி பெற்று விட்டாலும் இன்னும் எனக்கு பயம் போகவில்லை. `இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ படத்தில் நடித்த போதும் அந்த பீதி குறையவில்லை. ‘இம்சை அரசனை ஏற்றுக் கொண்டார்கள் இந்த அழகப்பனை ஏற்றுக் கொள்வார்களா என்று சில நேரம் யோசிப்பேன்.

எது எப்படியோ தினம் தினம் பயம் இருக்கும். படத்தின் பட்ஜெட் அதிகரிக்கும் போதெல்லாம் இந்த பயம் இன்னும் அதிகரிக்கும். ஸ்ரேயா நடிக்க வந்த போது படத்தின் பிரம்மாண்டம் இன்னும் கூடியது. அப்போது கூட எனக்கு பயமாகவே இருந்தது. படம் வரவேற்பு பெறும் என்கிற நம்பிக்கை இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு உதறல் இருக்கத்தான் செய்கிறது.

`இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ அனுபவம் எப்படி?

இந்தப் படத்தின் இயக்குனரை நான் பங்காளி என்று தான் அழைப்பேன். எனக்காக எழுதப்பட்ட கதை. என்னைப் புரிந்து அமைக்கப்பட்ட காட்சிகள். அதனால் ரசித்து ரசித்து செய்தார். இந்தப் படத்துக்காக நான் நிறைய கஷ்டப்பட்டேன்.

முதலில் 70 நாள் கால்ஷீட் கொடுத்தேன். படம் பெரிதாக வர வேண்டுமென்று 6 மாதம் கால்ஷீட் கொடுத்தேன். இந்திரன், எமன், நாடக நடிகர் அழகப்பன் என்று மூன்று வேடங்களில் நடித்து இருக்கிறேன். இதற்காக பல படங்களை இழந்து நடித்திருக்கிறேன். இதற்கான உடைகளை அணிவதே பெரிய கஷ்டம்.

அழகப்பனுக்குப் பிறகு வழக்கம் போல மற்ற நடிகர்களின் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிப்பேன். ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படத்தில் கதாநாயகனாக நடிப்பேன்.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

No comments yet.

Leave a comment

(required)

(required)