ஓய்வுதான் அனைத்திற்கும் அடிப்படை! ஜெயம் ரவி

006.jpg

அழகிய அசத்தல் உடற்கட்டுக்குச் சொந்தக்காரர் இளம் புயல் ஜெயம் ரவி. அவரிடம் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் ரகசியம் என்ன என்று வினவினோம்.
ரகசியம் என்று நாம் கூறிவிட்ட பின்னரும், மறைத்து மழுப்பலான பதில்களைச் சொல்லாமல் மடை திறந்த வெள்ளமாய் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டார் ரவி.

 

அவர் உடம்பைக் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கும் முறை, கலை மற்றும் காவல் துறையில் சேரும் தோழர்களுக்கு மட்டுமல்லாது, இளம் தோழிகளுக்கும் கூட மிக உபயோகமாக இருக்கும்.”கடவுள் எனக்கு கொடுத்த மிகப்பெரிய வரம்னு கூட என் உடம்பைச் சொல்லலாம்.அந்தளவுக்கு நான் சொல்றபடி என் உடம்பு கேட்கும். எல்லாருக்கும் அப்படி அமையாது. ஆனா எனக்கு அப்படி அமைஞ்சிருக்கு. திடீர்னு உடம்பைக் குறைக்கணும்னு சொன்னா, 15-30 நாளுக்குள்ள என்னால குறைச்சிட முடியும்.

அதே மாதிரி ஒரு படத்தோட கேரக்டருக்கு கட்டுமஸ்தான உடம்பு தேவைப்படுதுன்னா “டக்’னு ஏத்தி ஷூட்டிங் ஸ்பாட்ல போய் என்னால நிக்கவும் முடியும்.

ஓய்வுதான் அடிப்படை!

எந்தக் குறையும் இல்லாம உடம்பைக் கட்டுக்கோப்பா வச்சிக்கணும்னு நீங்க நினைச்சா, நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய முதல் விஷயம் உடம்புக்கு நல்ல ஓய்வு கொடுக்கறதுதான்!

ஏன்னா அதுதான் எல்லாத்துக்கும் அடிப்படை. சுவரிருந்தாதான் சித்திரம் வரைய முடியும்னு சொல்வாங்களே, அதுமாதிரி நல்லா ஓய்வு எடுத்தாதான் அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைக்கெல்லாம் நல்ல எனர்ஜி ப்ளஸ் ஃப்ரஷ்னஸ் கிடைக்கும்.

உடற்பயிற்சி முக்கியம்!

உடற்பயிற்சி இல்லாம உடம்பைக் கட்டுக்கோப்பா வச்சிக்க முடியுமா என்ன? என்னால உடற்பயிற்சி பண்ணாம இருக்க முடியாது. அதனாலேயே இப்போ எங்க வீட்லயே எனக்காக ஒரு ஸ்பெஷல் ஜிம் போட்டாச்சி!

ஷூட்டிங் முடிஞ்சி லேட்டா வந்தாக்கூட ஜிம்ல வொர்க் அவுட் பண்ணிட்டுத்தான் அடுத்த வேலையே ஆரம்பிப்பேன். ஏன்னா, நான் இப்போ கேப் இல்லாம ஷூட்டிங் போய்ட்டிருக்கேன். இந்த மாதிரி டைம்ல ஜிம் போய் வொர்க் அவுட் பண்ண டைம் இருக்கிறதில்ல.

அதனால வீட்லயே அன்னன்னைக்கு கரெக்டா வொர்க் அவுட் பண்ணினாதான் உடம்பை மெயின்டெய்ன் பண்ண முடியும்.

டான்ஸ் பண்ணுவீங்களா?

“பாடி பில்டிங்’ பயிற்சிகள் செய்யும்போது உடம்பு செம “ஸ்ட்ராங்’ ஆயிடும். அதனால அப்பப்போ வியர்வை வர்ற அளவுக்கு டான்ஸ் பண்ணினா உடம்புல சேர்ற தேவையில்லாத கொழுப்புகள் கரைய ஆரம்பிச்சிடும்.

அது மட்டுமில்ல, மனசுக்கு நல்ல அமைதி கிடைக்கும். டென்ஷன் குறையும். அதுவே நீங்க அதிகமான சவுண்ட்ல மியூஸிக் கேட்டுகிட்டே டான்ஸ் பண்ணும்போது மனசு லேசாயிடும். ஏதோ உன்னதமான ஒரு உலகத்துக்குப் போற மாதிரியான ஃபீல் கிடைக்கும்.

டான்ஸ் பண்றதால இன்னொரு நல்ல விஷயம், உடம்புக்கு நல்ல ஃப்ளக்ஸிபிலிட்டி கிடைக்கும். இதன் மூலமா ரொமான்டிக் மற்றும் காமெடி காட்சிகள்ல நல்ல பாடி லாங்வேஜை வெளிப்படுத்த முடியும்.

நீச்சலாவது…?

நீச்சல் பயிற்சியினாலயும் கூட டான்ஸ் பண்றதுக்கு இணையான பயன்களை நாம் பெறலாம். நீச்சல் பண்ணினா உடம்புக்கு நல்ல வடிவமும், மினுமினுப்பும் கூட கிடைக்கும்.

உணவுக் கட்டுப்பாடு வேணுங்க!

அடுத்த விஷயம் உணவுக் கட்டுப்பாடு. எல்லாரும் கஷ்டப்பட்டு உழைச்சி நல்ல சாப்பிடணும்னு நினைப்பாங்க. ஆனா ஒரு நடிகனைப் பொறுத்தவரைக்கும் அவன் எவ்வளவுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறானோ அதே அளவுக்கு அதிகமா சாப்பிடக்கூடாது! கம்மியாதான் சாப்பிடணும் (சிரிக்கிறார்).

அப்புறம் எண்ணெய் அதிகமா கலந்திருக்கிற உணவுகள், ஐஸ்கிரீம் இந்த மாதிரி ஐட்டம்லாம் சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும். அதுக்காக சாப்பிட்டுட்டே இருந்தோம்னா, தேவையில்லாம எடை போடுறதோட வயசாகற காலத்துல நோய்களையும் கொடுக்க ஆரம்பிச்சிடும்.

இதுதான் என் மெனு!

நான் இரவு நேரத்துல அரிசி சாதம் பெரும்பாலும் எடுத்துக்க மாட்டேன். சப்பாத்திதான் எப்பவும்! ஏன்னா, அரிசி சாதம் ஃபுல் அண்ட் ஃபுல் கார்போஹைட்ரேட்.

உடம்பை உடனே “பம்ப்’ பண்ணி எடை போட வச்சிடும். ஆனா காலையில கார்போஹைட்ரேட் அதிகமா இருக்கற இட்லி, தோசையைதான் அதிகமா சாப்பிடுவேன்.

காலைல சாப்பிடுறதைவிட மதியம் கொஞ்சம் கம்மியாதான் சாப்பிடுவேன். நைட் அதைவிட கம்மி. மதியத்துலயும், நைட்லயும் கார்போஹைட்ரேட் இருக்கிற ஐட்டங்களைக் குறைச்சு புரோட்டின் அதிகமா இருக்கிற சப்பாத்தி, சிக்கன் ஐட்டங்களைச் சேர்த்துக்குறுதுதான் என் டயட்.

இது மஸ்ஸில்ûஸ (தசைகள்) நல்லா டெவலப் பண்ணும். முட்டை வெள்ளைக் கருவிலயும் புரோட்டீன்ஸ் அதிகமுண்டு. நைட்ல எண்ணெய் சேர்க்காம சப்பாத்தி, கொஞ்சம் பழங்கள்.

வெப்பத்தைத் தணியுங்கள்!

பாடி ஹீட்டை கன்ட்ரோல் பண்ணாம உடம்பு ஏத்தறது வேஸ்ட்! நார்மலாவே எக்ஸர்ûஸஸ் பண்ணும்போது ஹீட் அதிகமா புரட்யூஸ் ஆகும். சிக்கன் மாதிரி ஐட்டங்களை எடுத்துக்கும்போது ஹீட் இன்னும் அதிகரிக்கும்.

úஸô, தண்ணி அதிகமா குடிக்கலாம். அப்புறம் உடம்புக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஃப்ரூட்ஸ், ஃப்ரூட் ஜூஸஸ், லெமன் ஜூஸ், இளநீர் அடிக்கடி குடிச்சோம்னா ஹீட் குறையறதோடு முகப்பருக்கள் மாதிரியான தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராது. தோல் பளபளன்னு இருக்கும்.

கட்ஸ் வரமாட்டேங்குதா?

வாழைப்பழம் அதிகமா சாப்பிடுங்க! நல்ல எனர்ஜி கிடைக்கும். எண்ணெய்ல செய்யப்பட்ட உணவுகளை விட இயற்கை உணவுகள் எடுத்துக்கிறது ரொம்ப நல்லது.

அப்புறம் எக்ஸர்ûஸஸ் பண்ற நிறைய ஃப்ரெண்ட்ஸ் புலம்பறது என்னன்னா… “மச்சான் எவ்ளோ வொர்க் -அவுட் பண்ணியும் உடம்புல கட்ஸ் வரமாட்டேங்குதுடா’ன்றதுதான்!

கட்ஸ் வரணும்னா சுகர் லெவல் கம்மியா இருக்கிற சாப்பாட்டை எடுத்துக்கோங்க தலைவா!” என்று அசத்தல் அறிவுரையுடன் அட்டகாசமாய் சிரிக்கிறார் ரவி.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

No comments yet.

Leave a comment

(required)

(required)