நடிகைகளின் சொந்த வாழ்க்கையை விமர்சிக்க கூடாது -நமீதா

003.jpg

 

கவர்ச்சியின் நடிப்பால் ரசிகர்களின் மனதை சிறை பிடித்திருப்பவர் நமீதா. இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் ரகத்தை சேர்ந்தவை.
வெள்ளை மனசுக்கு சொந்தக்காரரான நமீதாவுடன் ஒரு கலகலப்பான சந்திப்பு.

கேள்வி: சினிமா மூலம் நீங்கள் எதிர்பார்த்த வாழ்க்கை கிடைத்திருக் கிறதா? மறைக்காமல் சொல்லுங்கள்

பதில்:நிச்சயமாக. நான் சினிமாவில் என்ன எதிர் பார்த்தேனோ அந்த வாழ்க்கை எனக்கு கிடைத்திருக்கிறது.நான் எப்போதுமே வெற்றி- தோல்வியைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. ஒரு படம் தோல்வி அடைந்தால் அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாக நடிப்பேன்.

கே: கவர்ச்சி-நடிப்பு இவற்றில் நீங்கள் அதிகமாக நம்புவது?

ப: தற்போதைய கால கட்டத்தில் இரண்டுமே அவசியம். வெறும் நடிப்பு திறமை மட்டும் இருந்து கவர்ச்சி இல்லை என்றால் சினிமாவில் பெரிய அளவுக்கு சாதிக்க முடியாது. அதற்காக கவர்ச்சியை மட்டும் நம்பி இருக்க முடியாது.

கே: நீங்கள் ஆபாசமாக நடிப்பதாக சில பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளதே?

ப: பெரும்பாலும் நான் கதைக்கேற்றபடிதான் கவர்ச்சியாக நடிக்கிறேன். நானாக விரும்பி அப்படி நடிப்பதில்லை. டைரக்டர்கள் சொல்வது போல்தான் நடிக் கிறேன். இந்த விஷயத்தில் என்னை குற்றம் சாட்டுவது சரியல்ல.

கே: சமீபகாலமாக புதுமுக நடிகைகளால் போட்டி அதிகரித்து விட்டதே?

ப: எத்தனை புதுமுக நடிகைகள் வந்தாலும் எனக்கு கவலை இல்லை. எனக்கென்று வருகின்ற வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. சினிமாவை பொறுத்தவரையில் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்திருக்க முடியும்.

கே: காதலரை நீங்கள் விரைவில் திருமணம் செய்யப்போவதாக கூறப்படுகிறதே?

ப: யார் சொன்னது இதெல்லாம் சுத்த பொய். நான் திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை.என் காதலர் (பரத்கபூர்) பற்றியோ என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ என்ன கேட்டாலும் நான் சொல்ல மாட்டேன். சினிமா பற்றி மட்டும்தான் பதில் சொல்வேன்.நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை சிலர் விமர்சனம் செய்கிறார்கள் இது தவறு. நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.

கே: வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்?

ப: நான் 1998ம் ஆண்டு மிஸ்சூரத் அழகியாக தேர்ந் தெடுக்கப்பட்டேன். இதே போல 2001ல் மிஸ் இந்திய அழகிப்பட்ட போட்டியில் 3-வது இடம் பிடித்தேன். இவற்றை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது.

Leave a Reply