| தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வில்லன், குணசித்திர வேடங்களில் 300 படங்களுக்கு மேல் நடித்த ரகு வரன் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. |
| ரகுவரனுக்கு போதை பழக்கம் இருந்தது. கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். டாக்டர்கள் மது அருந்ததக்கூடாது என எச்சரித்தனர். சிகிச்சைக்கு பின் உடல் தேறினார். தற்போது சில படங்களில் நடித்து வந்தார். மீண்டும் குடிப்பழக்கத்துக்கு ஆளானார். |
இதையடுத்து உடல்நிலை மிகுந்த பாதிப்புக்கு உள்ளா னது. சேத்துப்பட்டில் உள்ள மேத்தா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.ரகுவரன் வில்லன், குண சித்திர வேடங்களில் கலக்கியவர். கத்தி, ரத்தம், மூர்க்கத்தனமான சண்டை கள்தான் வில்லன் வேடத்துக்கு தேவை என்பதை உடைத்து அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாதாரண மனிதனாக வந்து வில்லத்தனத்தை கச்சிதமாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
தமிழில் “ஏழாவது மனிதன்” படத்தில் அறிமுகமானார். “சம்சாரம் அது மின்சாரம்” படத்தில் குணசித்திர வேடத் தில் கலக்கினார். “புரியாத புதிர்” படத்தில் சைக்கோ கணவராக இவர் பேசிய `ஐநோ ஐநோ’ வசனம் பிர பலம். “நேருக்கு நேர்”, “அஞ்சலி” படங்களில் முக்கிய வேட மேற்றார். “முதல்வன்” படத் தில் இவரது முதல்-மந்திரி பாத்திரம் பேசப்பட்டது.
ரஜினி படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். “ராஜா சின்ன ரோஜா”, “முத்து” சமீபத்தில் வெளியான “சிவாஜி” படத்தில் வந்தார். “பாட்ஷா”வில் இவர் நடித்த “மார்க் ஆண்டனி” கேரக்டர் பாப்புலர்.
கடைசியாக விக்ரமுடன் “பீமா”வில் நடித்து இருந்தார். தற்போது “இந்திர விழா” என்ற படத்தில் நடித்துக் கொண் டிருந்தார். டெலிவிஷன் தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
ரகுவரனுக்கும், நடிகை ரோகிணிக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர்களுக்கு நந்தா என்ற குழந்தை உள்ளது.
தியாகராய நகர் ஜெகதாம் பாள் தெருவில் உள்ள வீட்டில் தற்போது தனியாக வசித்து வந்தார்.
ரகுவரன் உடல் அவரது வீட்டில் இன்று பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. நாளை
இறுதிசடங்கு நடக்கிறது.

