வெள்ளித்திரை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் விஜியுடன் வந்து கலந்து கொண்டார் பிரகாஷ் ராஜ்.
அப்போது அவருடன் பேசியதில் இருந்து….
வெள்ளித்திரை படம் பற்றி…?
எனது டூயட் மூவிஸ் சார்பில் ஆபாசமில்லாத தரமான படங்களை மட்டுமே எடுப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அந்த வகையில் மொழிக்குப் பிறகு முக்கியமான படம் வெள்ளித்திரை.
சினிமாவைப் பற்றிய கதையை எப்படி தைரியமாக எடுத்தீர்கள்?
சினிமா உலகைப் பற்றிப் படமெடுத்தால் புரியுமா என்று சிலர் பயமுறுத்தினார்கள். விஞ்ஞானி பற்றிப் படமெடுத்தால் பார்ப்பவர்களும் விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
தளபதி, கேப்டன் என்பது பற்றி வசனங்களில் இடம்பெற்றுள்ளதே?
ஆம். யாரையும் கிண்டல் செய்வதற்காக அந்த வசனங்களை வைக்கவில்லை. பட்டம் என்பது மக்கள் கொடுப்பது. அதை விட்டு, நேற்று வந்தவர்கள் எல்லாம் பட்டம் வைத்துக் கொள்வதைத்தான் சுட்டிக் காட்டியிருக்கிறோம். இதை நாங்கள் கிண்டல் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்.
மற்ற மொழிகளில் நடித்தாலும் தமிழில் மட்டும் படம் தயாரிப்பது ஏன்?
நான் நான்கு மொழிகளில் நடித்தாலும் தமிழில் மட்டுமே படம் தயாரிக்கிறேன். இந்திய சினிமாவில் தமிழ்த் திரையுலகம் காசி மாதிரி புனிதமானது என்பதால் தமிழில் மட்டும் படம் எடுக்கிறேன்.
படம் இயக்கும் எண்ணம் உண்டா?
காலமும் நேரமும் கூடி வந்தால், ஒரு படத்தை இயக்குவேன். எனக்கும் படம் இயக்கும் ஆசை இருக்கிறது என்று கூறி முடித்தார் பிரகாஷ் ராஜ்.
பேட்டியின் போது உடனிருந்த `வெள்ளித்திரை’ படத்தின் இயக்குநர் விஜியிடம், உங்கள் படத்தின் கிளைமாக்ஸ் நம்புகிற மாதிரி இல்லையே என்று கேட்டதற்கு, விமர்சனம் என்பது தனிப்பட்டவர்களின் கருத்து. அது சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை என்று பதிலளித்தார்.
