| ‘வெயில்’ படத்திற்கு பிறகு பசுபதியின் கேரியர் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ‘வெடிகுண்டு முருகேசன்’, ‘குசேலன்’, ‘ராமன் தேடிய சீதை’ என தான் நடிக்கும் எல்லா படங்களிலும் கதையின் நாயகனாக பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்திருகிறாராம். |
| ‘குசேலன்’ படத்தில் பசுமதிதான் ஹீரோ. நான் வெறும் 25 சதவீதம்தான் என ரஜினி சொன்ன வார்த்தைகள் பசுபதிக்கு மேலும் ஊட்டம் கொடுத்துள்ளது.
‘ராமன் தேடிய சீதை’ படத்தில் சேரன்தான் கதாநாயகன் என்றாலும் ரசிகர்கள் ஆழமாக பதியும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் பசுபதி. “இதுவரை என் கேரியரில் இப்படியொரு கேரக்டரில் நடித்ததில்லை. நாடகங்களில்கூட இந்தமாதிரி கதாபாத்திரத்தில் நடித்ததில்லை” என்னும் பசுபதி அந்த கேரக்டரின் ரகசியத்தை மட்டும் சொல்லாமல் மறைந்துவருகிறார். ஆனால் அவர் நடிப்பது பார்வையற்ற கதாபாத்திரம் என்பது தெரிந்துவிட்டது. இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய ஹோம் வொர்க் செய்து நடித்துள்ளாராம் பசுபதி. இதுபோன்ற கேரக்டர் சாதாரண விஷயம் இல்லை என்பதால் கமல் நடித்த ‘ராஜபார்வை’, விக்ரம் நடித்த ‘காசி’, அமிதாப்பச்சன் நடித்த ‘பிளாக்’ ஆகிய படங்களை அடிக்கடி பார்த்து சில மேனரிஷங்களை கற்றுக்கொண்டாராம். |
