Blogs in Tamil
‘பில்லா’வின் சாதனை
அஜித் அவ்வளவுதான் என்று சொன்னவர்களுக்கு பில்லா சரியான பதிலடி கொடுத்திருக்கிறது. பில்லாவுக்கு முன் அஜித் கொடுத்த கடைசி ஹிட் ‘வரலாறு’.
அதன்பிறகு வந்த ‘ஆழ்வார்’, ‘கிரீடம்’ இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் சொல்லும்படியான வெற்றியை பெறவில்லை. அதிலும் ‘ஆழ்வார்’ எதிர்பாராத படுதோல்வியை சந்தித்தது.
அஜித் அவ்வளவுதான் என்று ஆளாளுக்குப் பேசத் தொடங்கியதுபோது பில்லா புராஜெக்ட் டேக் ஆஃப் ஆனது. ரீ- மேக் படம், அதுவும் ரஜினி நடித்தது. அஜித் அதில் என்னச் செய்யப் போகிறார் என ஏளனமும், எதிர்பார்ப்பும் சரிவிகிதத்தில் இருந்தது.
ஏளனத்தை […]
பழைய படங்களின் பெயருக்குக் கட்டுப்பாடு
அபூர்வ சகோதரர்கள், சதி லீலாவதி, தசாவதாரம் படங்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. கமல் நடித்தப் படங்கள் என்பதைத் தாண்டி இவை அனைத்தும், ஏற்கனவே வெளிவந்த படங்களின் பெயர்கள்.
கமலின் புதிய படம் மர்ம யோகியும் பழைய படத்தின் பெயர் என்பது பலருக்கு தெரியாது. தொடர்ந்து பழைய படங்களின் பெயர்களை வைப்பதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.
புதிய படங்களுக்கு பழைய பெயர்களை வைப்பதை, பழைய படங்களின் தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. தங்கள் படங்களை அவர்கள் ரீ-மேக் செய்ய விரும்பும்போது அதே பெயரில் […]
வசனகர்த்தா பிரசன்னகுமார் மரணம்
வெற்றிபெற்ற பல தமிழ் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள எழுத்தாளர் பிரசன்னக்குமார் மரணமடைந்தார். யார்விட்ட சாபமோ தமிழ்த்திரையுலகில் சில மாதங்களாக திரைக்கலைஞர்கள் பலரது கடைசி அத்தியாயம் கிழிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் பாண்டியன், எழுத்தாளர்கள் சுஜாதா, ஸ்டெல்லாபுரூஸ், நடிகர்கள் ரகுவரன், சோபன் பாபுவை தொடர்ந்து பிரபல வசனகர்த்தாவான பிரசன்னகுமாரும் மரண மடைந்தார்.
பாலைவனச்சோலை படம் மூலம் கலையுலகில் காலடி எடுத்துவைத்தவர் பிரசன்னக்குமார். இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ள இவர் விவேக்கிற்கு நீண்ட காலமாக காமெடி டிராக் எழுதிவந்தார். நேற்று திரைக்கு […]
தீவிரவாதத்தை ‘அறுவடை’ செய்யும் அதிகாரிகள்!
WD
மாலிக் என்ற பெயரில் தீவிரவாதிகள் குழு ஒன்று தென்னிந்தியாவில் ஊடுருவுகிறது. அவர்களின் சதித் திட்டங்களை காவல்துறை அதிகாரியுடன் உதவியுடன் முறியடிக்கிறார் உளவுத்துறை அதிகாரி.
‘ஆபரேஷன் மாலிக்’ என்ற இந்த களையெடுக்கும் வேலைதான் படத்தின் பிரதானப் பகுதி.
கோபி கிருஷ்ணன் என்ற உளவுத்துறை உயரதிகாரியாக மம்மூட்டியும், துடிப்பான காவல்துறை அதிகாரி அன்வர் ஹுசைனாக அர்ஜுனும், நாயகிகளாக சினேகாவும், மம்தா மோகன்தாஸும் நடித்துள்ளனர்.
‘வந்தே மாதரம்’ என்ற பெயரில் மலையாளத்திலும் வெளிவரவுள்ள இப்படத்தை டி.அரவிந்த் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு, சென்னை, கொச்சி, கன்னியாகுமரி […]
அனல் காற்றில் தபு?
தனது படத்துக்கு சரியான நாயகி அமையாத தவிப்பில் இருக்கிறார் பாலுமகேந்திரா.’அது ஒரு கனாக்காலம்’ படத்துக்குப் பிறகு பாலுமகேந்திரா இயக்கும் படம் ‘அனல் காற்று’ கே.ராஜேஷ்வரின் ‘இந்திரவிழா’ படத்துடன் இதற்கும் தொடக்கவிழா நடத்தப்பட்டது.
ஆனாலும், படப்பிடிப்புக்கு இன்னும் கிளம்பாமலே இருக்கிறார் பாலுமகேந்திரா.
அனல் காற்றில் ப்ரியாமணி நடிப்பார் எனக் கூறப்பட்டது. பிறகு மாளவிகாவின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில், நக்மா நடிக்கிறார் என செய்திகள் அனைத்தையும் மறுத்தார் பாலுமேந்திரா.
அவரது விருப்பம் மேலே உள்ள எந்த நடிகையும் அல்ல. தபு நடித்தால் சிறப்பாக இருக்கும் […]
தத்தளிப்பில் தசாவதாரம் ஆடியோ விழா!
அதோ இதோ என்ற தசவாதராம் ஆடியோ வெளியிட்டு விழா, மேலும் சில வாரங்கள் தள்ளிப் போகிறது.தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த எண்ணிய தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
ஜாக்கிசானை விழாவுக்கு அழைத்துவர முயற்சிகள் எடுத்தார். ஜாக்கிசானும் விழாவுக்குவர ஒத்துக்கொண்டார். ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் விழாவை நடத்த ஏற்பாடானது.
திடீரென்று ஏப்ரல் இறுதிக்கு ஆடியோ வெளியீட்டு விழா தள்ளிப் போயுள்ளது. ஏன் எதற்கு என்ற காரணம் இதுவரைச் சொல்லப்படவில்லை. படவேலைகள் முடியாததே இதற்கு காரணம் என படக்குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தார்கள்.
ஆடியோ வெளியீடு […]
பார்வையற்றவராக நடிக்கும் பசுபதி
‘வெயில்’ படத்திற்கு பிறகு பசுபதியின் கேரியர் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ‘வெடிகுண்டு முருகேசன்’, ‘குசேலன்’, ‘ராமன் தேடிய சீதை’ என தான் நடிக்கும் எல்லா படங்களிலும் கதையின் நாயகனாக பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்திருகிறாராம்.
‘குசேலன்’ படத்தில் பசுமதிதான் ஹீரோ. நான் வெறும் 25 சதவீதம்தான் என ரஜினி சொன்ன வார்த்தைகள் பசுபதிக்கு மேலும் ஊட்டம் கொடுத்துள்ளது.
‘ராமன் தேடிய சீதை’ படத்தில் சேரன்தான் கதாநாயகன் என்றாலும் ரசிகர்கள் ஆழமாக பதியும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் பசுபதி. “இதுவரை என் கேரியரில் […]
வைத்தீஸ்வரன்
படத்தில் சாலமன் பாப்பையா இல்லாத குறைதான். மறுஜென்மம் உண்டா இல்லையா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்த பொருத்தமான கதை.
அரசியல்வாதியான ஷாயாஜிஷிண்டே கோயில் நகைகளை கொள்ளையடிக்கிறார். இதை பார்க்கும் சரவணன் என்ற சிறுவனை கொலை செய்கிறார். மகன் போன இடத்துக்கே போக தற்கொலைக்கு முயலும் சரவணனின் தாயை தடுத்து நிறுத்துகிறார் ஜோதிடரான விஜயகுமார்.
“சரவணன் மறுபிறவி எடுப்பான்; அதுவரை காத்திரு” என்பவர் “சரவணன் கையால்தான் ஷாயாஜிஷிண்டேவுக்கு சாவு” என ஆரூடம் கூறி்ச்செல்ல அடு்த்தடுத்த காட்சிகளில் அனல் பற்ற ஆரம்பிக்கிறது. விஜயகுமார் […]
பிரபல நடிகர் சோபன் பாபு மரணம்
பிரபல தெலுங்கு நடிகர் சோபன் பாபு இன்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.
வீர அபிமன்யு திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் சோபன் பாபு. இவர் ஏராளமான தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் தமிழ், கன்னட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளன.
துவக்கம் முதலே சென்னையில் தங்கியிருந்த சோபன்பாபு யோகாசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இன்று காலை யோகாசனத்தில் ஈடுபட்டிருந்த போது, திடீரென்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர். […]
போதை பழக்கத்தால் உடல் நலம் பாதிப்பு; நடிகர் ரகுவரன் “திடீர்” மரணம்
தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வில்லன், குணசித்திர வேடங்களில் 300 படங்களுக்கு மேல் நடித்த ரகு வரன் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.
ரகுவரனுக்கு போதை பழக்கம் இருந்தது. கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். டாக்டர்கள் மது அருந்ததக்கூடாது என எச்சரித்தனர். சிகிச்சைக்கு பின் உடல் தேறினார். தற்போது சில படங்களில் நடித்து வந்தார். மீண்டும் குடிப்பழக்கத்துக்கு ஆளானார்.
இதையடுத்து உடல்நிலை மிகுந்த பாதிப்புக்கு உள்ளா னது. […]
