Archive for the ‘Blogs in Tamil’ Category

அறை எண் 305-ல் கடவுள்

Monday, March 17th, 2008

img1080228028_1_1.jpg

 

இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்த இயக்குனர் சிம்பு தேவனின் அடுத்த படைப்பே ‘அறை எண் 305-ல் கடவுள்’.

சாதாரண மனிதர்களான கஞ்சான கருப்புக்கும், சந்தானத்துக்கும் கடவுள் போல் வந்து உதவுகிறார் பிரகாஷ்ராஜ்.இதுதான் படத்தின் ஒரு வரிக் கதை.திரைக்கதையில் தனது ஆளுமையைக் காட்ட முயன்றிக்கிறார் சிம்பு தேவன் என்கிறது படக்குழு.

ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முக்கிய அம்சமே ‘செட்’டுகள்தான்.இந்தப் படத்துக்கென வித்தியாசமான பல்வேறு அரங்குகள் மிக பிரமாண்டமாகவும், தத்ரூபமாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்றுதான் ‘நிலா’வைப் போன்ற அரங்கு.இந்த அரங்கை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குனர் செல்வகுமார்.

இந்த நிலாவில், கஞ்சா கருப்பும், சந்தானமும் ஆடிப் பாடுவதாக காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.இந்தப் பாடல் நல்ல வரவேற்பைப் பெரும் என்று சிம்பு தேவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தக் கடவுளை ரசிகர்கள் அடுத்தமாதம் வெள்ளித்திரையில் தரிசிக்கலாம்!

படக்குழு

நடிகர், நடிகைகள் : பிரகாஷ்ராஜ், கஞ்சா கருப்பு, சந்தானம், மதுமிதா, ஜோதிர்மயி, ராஜேஷ், இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், தலைவாசல் விஜய், மதன்பாப், குயிலி, சம்பத், வி.எம்.சி. ஹனி·பா, டெல்லி கணேஷ், சுகுமார், முத்துக்காளை, பெரியார்தாசன்.

இசை : வித்யாசாகர்
பாடல்கள்: முத்துலிங்கம், நா. முத்துக்குமார், பா. விஜய், யுகபாரதி, கபிலன்
ஒளிப்பதிவு : எஸ். செளந்தர்ராஜன்
படத்தொகுப்பு : ஜி. சசிகுமார்
கலை : செல்வகுமார்
சண்டைப் பயிற்சி : கிரேட் செல்வா
இயக்கம் : சிம்பு தேவன்
தயாரிப்பு : இயக்குனர் ஷங்கர்

சு‌ப்ரம‌ணியபுர‌ம்

Monday, March 17th, 2008

img1080313033_1_1.jpg

 

FE

மதுரை‌யி‌ல் சு‌ப்ரம‌ணியபுர‌ம் எ‌ன்ற இடத்தில் கடந்த 1980ம் ஆண்டுகளில் நடந்த ஒரு காத‌ல் கதை‌தா‌ன் ‘சு‌ப்ரம‌ணியபுர‌ம்’.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முந்தைய கதை என்பதால் ஹ‌ீரோ ஜெ‌ய், அவரது ந‌ண்பராக வரு‌ம் ச‌சிகுமா‌ர், க‌ஞ்சா கரு‌ப்பு என எ‌ல்லோரு‌ம் ‌ஸ்டெ‌ப் க‌ட்டி‌ங் ஹேர் ஸ்டைல், பட்டன் தெறிக்கும் டைட் சட்டை, பெல்ஸ் பாட்டம் பேண்ட் என வித்தியாசமான கெட்அப்களில் வலம் வருகின்றனர்.

இந்த ந‌ண்ப‌ர்களு‌க்கு இடையே ஒரு பெ‌ண்ணால் ‌வி‌ரிசல் உருவாகிறது. முடிவு என்ன என்பது மனதை உருக்கும் க்ளைமாக்ஸ்.

நண்பர்கள் மத்தியில் விரிசல் ஏற்பட காரணமாகும் பெண்ணாக வருகிறார் நாயகி ‌ஸ்வேதா. படத்தை சொந்தமாக தயாரித்து இயக்குகிறார் ச‌சிகுமார். நான்கு நண்பர்களில் இவரும் ஒருவர்.

‌படத்துக்கு இசையமைத்திருப்பவர் டிவி புகழ் ஜே‌ம்‌ஸ் வச‌ந்த‌ன். தனது மானசீக குரு என்பதால் ‌இசையமைக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார் சசிகுமார்.

‌படத்தில் இடம்பெறும் ஒரு திரு‌விழா கா‌ட்‌சியில் சுமார் 300 துணை நடிக‌ர்கள் நடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே அந்தகால கா‌ஸ்‌ட்யூ‌ம்க‌ளில் வருவது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

தோழர்களின் கதை ‘தோழா’

Monday, March 17th, 2008

tfg.jpg

FE

செ‌ன்னை-600028′ ஹீரோக்கள் மீண்டும் கைகோர்க்கும் புதிய படம் ‘தோழா’ ‌அரோவணா ‌பி‌லி‌ம்‌ஸ் தயா‌ரிக்கும் இப்படத்தில் நி‌தி‌ன் ச‌த்யா, ‌பிரே‌ம்‌ஜி அமர‌ன், அஜ‌ய் ரா‌ஜ் ம‌ற்று‌ம் வச‌ந்‌த் ‌விஜ‌ய் என 4 ஹீரோக்கள்.

இவ‌ர்களுட‌ன் சா‌கி‌த்யா, ஜெ‌னிப‌ர், ல‌‌க்சனா, சவு‌மியா, வெண்ணிற ஆடை மூ‌ர்‌த்த‌ி மற்றும் டெ‌ல்‌லி கும‌ா‌ர் ஆ‌கியோரு‌ம் நடி‌க்‌கின்றனர்.

‘வானமே எ‌ல்லை’ எ‌ன்று வா‌ழ்‌கிற ந‌ண்ப‌ர்க‌ளி‌ன் வா‌‌ழ்‌க்கையில் ஒரு அதிர்ச்சிகரமான திருப்பம். அதை அவர்கள் அனைவரும் தோழமையுடன் எப்படி எ‌தி‌ர்கொ‌ள்கின்றனர் எ‌ன்பதுதான் கதை.

படத்தை சு‌ந்தரே‌ஸ்வர‌ன் இயக்குகிறார். இவர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவரது வேண்டுகோளை ஏற்று ஒரு ‌சி‌றிய வேட‌த்‌தி‌ல் பாலச‌ந்‌த‌ரும் தலை காட்டுகிறாராம்.

‘‌கி‌ல்‌லி’‌யி‌ல் ‌விஜ‌ய் த‌ங்கையாக நடி‌த்த ஜெனிபர், த‌ற்கொலை செ‌ய்வது போ‌ன்ற கா‌ட்‌சி‌யி‌‌ல் 4 வது மாடி‌‌யி‌லிரு‌ந்து ‘டூ‌ப்’ போடாம‌ல் கு‌தி‌‌த்து‌ அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளா‌ர். ‘வா தோழா வரலாறு படை‌ப்போம்’ என்ற அர்த்தமுள்ள பாடலு‌க்கு சுஜா ஆடி‌யிரு‌க்‌கிறா‌ர்.

‌பிரே‌ம்‌‌ஜி அமர‌ன் இசையில், ‘தாவ‌ணி கனவுக‌ள்’ பட‌த்‌தி‌ல் வரு‌ம், ‘ஒரு நாயக‌ன் உதயமா‌கிற‌ா‌ன்…’ பாடலை ‌ரீ-‌மி‌க்‌ஸ் செ‌ய்திருக்கிறார்கள்.

ரஜினி பட வாய்ப்பை மறுத்த கவுண்டர்

Monday, March 17th, 2008

kavundamani.jpg

மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்பது பழமொழி.

கவுண்டமணிக்கு பட வாய்ப்புகள் குறைந்தாலும் கூட பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிக்கும் குசேலன் பட வாய்ப்பினை நிராகரித்து விட்டாராம்.

மன்னன் படத்தில் ரஜினியுடன் கவுண்டமணி அடித்த காமெடி லூட்டி இன்றும் இனிப்பான காட்சிகளாக நீடிக்கும் நிலையில், சந்திரமுகி, தொட்டால் பூ மலரும் படங்களில் கவுண்டமணியை பி. வாசு கண்டுகொள்ளாததால், குசேலன் வாய்ப்பை மறுத்து விட்டாராம் கவுண்டர்.

கவுண்டமணியை அணுகி அவர் மறுத்ததாலேயே வடிவேலுவை ஒப்பந்தம் செய்தார்களாம்.

ரஜினி படத்தில் நடிக்க ஒவ்வொருவரும் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கையில், கவுண்டரோ, தேடி வந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம்.

கொம்பு இளைத்தாலும் மாடு மட்டும் இளைக்காது!

படப்பிடிப்பு நடத்த கெடுபிடி ஏன்?

Monday, March 17th, 2008

b9dc8ff218fdb8d64bb35fd8248c4.jpg

 

இந்திய அரசாங்கம் மீது கோபத்தில் இருக்கிறார்கள் சினிமாவைச் சேர்ந்தவர்கள். பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த கெடுபிடி செய்வதால்தான் இந்த கோபம்.

சமீபத்தில் `அரசாங்கம்’ படத்தின் ஷுட்டிங்கை விமான நிலையத்தில் நடத்த அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்தார்கள். விஷால் நடிக்கும் `சத்யம்’ படத்திற்கு விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தது. ஆனால், ரன்வேயில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு அனுமதி இல்லை.

நொந்துபோன இயக்குனர் ராஜசேகருக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறது துபாய் அரசு. ரன்வேயில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்காக தனது நாட்டு ரன்வேயை பயன்படுத்திக் கொள்ள துபாய் அரசு முன்வந்துள்ளது. இயக்குனர் ராஜசேகருடன் விஷால், உபேந்திரா ஆகியோர் இதற்காக விரைவில் துபாய் செல்கின்றனர்.

ஹாலிவுட் படங்களுக்கு தனது ராணுவ தளவாடங்களையே தந்து உதவுகிறது அமெரிக்க அரசு. இந்திய அரசிடம் மட்டும் ஏன் இந்தக் கெடுபிடி?

பதில் தெரியாமல் தவிக்கிறது படவுலகம்.

ரஜினிக்குப் போட்டி அவரே: நாயுடு பாராட்டு

Monday, March 17th, 2008

4483286fb8d9a4fe9d3f06b9bd987.jpg

 

“ரஜினி எனக்கு வழிகாட்டி, ஆசான், நண்பர்…” தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உணர்ச்சிவசப்பட்டு பேசியது `குசேலுடு’ படத்தின் தொடக்க விழாவில்!

ரஜினி நடிக்கும் குசேலன், குசேலுடு என்ற பெயரில் தெலுங்கில் தயாராகிறது. அஸ்வினி தத்தின் வைஜெயந்தி மூவிஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஹைதராபாத்தில் நடந்த தொடக்க விழாவில் ரஜினி, சிரஞ்சீவியுடன் ரஜினியின் அரசியல் நண்பர்களான முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவும் கலந்து கொண்டனர்.

சிரஞ்சீவி கிளாப் அடிக்க, சந்திரபாபு நாயுடு கேமராவை இயக்கி படத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய சந்திரபாபு நாயுடு, ரஜினியுடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம். அவருக்குப் போட்டி அவரேதான். அவர் ஒரு மாமனிதர் என்றெல்லாம் புகழ்ந்தார். ரஜினிக்கு சமுதாயத்திற்காக பாடுபடும் எண்ணம் இருப்பதாக அரசியல் பொடி வைத்து பேச்சை சந்திரபாபு முடித்துக் கொண்டார்.

தனது மகளின் காதல் திருமணத்தின் போது மன நெருக்கடிகளுக்கு ஆனானதையும், அந்த நேரம் ரஜினியுடன் ஒரு நாள் முழுவதையும் ஒன்றாக கழித்ததையும் சிரஞ்சீவி நினைவு கூர்ந்தார். “அன்றைய தினம் ரஜினிக்குள் ஒரு ஞானி இருப்பதை கண்டு கொண்டேன்” என்றார் நிஜமான ஆச்சரியத்துடன்.

ரஜினி தெலுங்கில் நடித்த முதல் படத்தை அப்போதைய ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ் கிளாப் அடிக்க, நாகேஸ்வர ராவ் தொடங்கி வைத்தார். தனது பேச்சில் இதனை குறிப்பிட்ட ரஜினி, அதேபோல் இந்தப் படத்தையும் பெரியவர்கள் சேர்ந்து தொடக்கி வைத்திருக்கிறார்கள். இதுவும் பெரிய வெற்றியை பெறும் என்றார்.

பிரிந்தது செல்வராகவன் – யுவன் கூட்டணி

Sunday, March 16th, 2008

yuvanshankar_raja001.jpg

 

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திலிருந்து அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. செல்வராகவன் படமென்றால் இசை யுவன் என்பது தவழும் குழந்தைக்கும் தெரியும்.
இந்தக் கூட்டணியில் யார் கண்பட்டதோ இவருவரும் திடீரென பிரிந்துள்ளனர். செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு யுவன்தான் முதலில் இசையமைத்தார். இப்போது திடீரென்று அவரை மாற்றிவிட்டு, ஜி.வி. பிரகாஷ்குமாரை ஒப்பந்தம் செய்துள்ளார் செல்வராகவன்.

இசையமைப்பாளரை மாற்றியதோடு தனது ஆஸ்தான பாடலாசிரியர் நா. முத்துக்குமாரையும் படத்திலிருந்து தூக்கியிருக்கிறார். இப்போது ‘ஆயிரத்தில் ஒருவனு’க்கு பாடல் எழுதுகிறவர், வைரமுத்து! ஏற்கனவே ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவருக்கு பதில் ராம்ஜிக்கு வாய்ப்பளித்தார் செல்வராகவன். இப்போது யுவன், முத்துக்குமார். அடுத்து யார்?

கோடிகளை அள்ளும் ‘குருவி’

Sunday, March 16th, 2008

016.jpg

 

படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. அதற்குள் ‘குருவி’யின் பர்சேஸ் களை கட்டிவிட்டது. கேரளாவில் விஜய் ஒரு சின்ன சூப்பர் ஸ்டார்.
தமிழ்நாட்டில் அவரது படம் இரண்டுகால் பாய்ச்சலில் ஓடினால், கேரளாவில் நாலுகால் பாய்ச்சலில் பறக்கும். ‘போக்கிரி’ போட்ட போடில் அங்குள்ள சூப்பர் ஸ்டார்களே பொறி கலங்கிவிட்டனர். தரணி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘குருவி’க்கு கேரளாவில் ஏக டிமாண்ட். ஏலத்தொகைபோல ‘குருவி’ யின் கேரள விநியோக உரிமை உயர்ந்து ஒன்றரை கோடியை தொட்டிருக்கிறது. ஒன்றரை கோடி கொடுத்து ‘குருவி’ யின் கேரள வினியோக உரிமையை வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் மஹி.

ஒன்றரை கோடி என்பது சராசரி மலையாளப் படமொன்றின் ஒட்டு மொத்த பட்ஜெட். சில வாரங்கள் முன்புதான் கமலின் ‘தசாவதாரம்’ இரண்டரை கோடிக்கு விலைபோனது.
நொந்து போயிருக்கிறார்கள் மலையாள நடிகர்கள்.

படங்கள் கைவசம்; முதல் இடத்தை பிடித்த நயன்தாரா

Sunday, March 16th, 2008

002.jpg

 

ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நயன்தாரா. குறுகிய நாட்களிலேயே முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானார்.சந்திரமுகியில் ரஜினியின் ஜோடியானார்.
இப்படம் அவருக்கு வாய்ப்புகளை குவித்தது. சிவாஜியில் ரஜினி யுடன் ஒரு பாடலுக்கு ஆடி அசத்தினார். வல்லவனில் துணிச்சலாக முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தி னார். தெலுங்கிலும் நாகர் ஜ×னா, வெங்கடேஷ் உள்ளிட்ட பெரிய ஹீரோக்கள் ஜோடியாகயுள்ளார்.

அஜீத் ஜோடியாக பில்லா படத்தில் கவர்ச்சியாக வந்தார். அவரது ஸ்டைல் பேசப்பட்டது. அவருக்கு மேலும் 5 படங்கள் கை வசம் உள்ளன.

தனுஷ் ஜோடியாக நடித்த யாரடி நீ மோகினி படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. விஷாலுடன் சத்யம் படத் தில் நடிக்கிறார். இப்படம் கோடை விடுமுறையில் வெளி யாகிறது.

அடுத்து `குசேலன்’ படத்தில் ரஜினி ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் படிப்பிடிப்பு அடுத்த மாதம் 7-ந் தேதி ஐதராபாத் பிலிம் சிட்டியில் துவங்குகிறது. தற்போது அஜீத் ஜோடியாக ஏகன் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். டான்ஸ் மாஸ்டர் ராஜ×சுந்தரம் இப்படத்தை இயக்குகிறார். பில்லாவுக்கு பிறகு அஜீத்தும், நயன்தாராவும் இதில் சேர்ந்து நடிக்கின்றனர். ஐங்கரன் பிலிம் இண்டர் நேஷனல் இப் படத்தை தயாரிக்கிறது.

விஜய் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவும் நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளார். பிரபு தேவா இயக்குகிறார்.

தமிழ் நடிகைகளில் அதிக படங்கள் கைவசம் வைத்துள்ளவர் நயன்தாரா என் பது குறிப்பிடத்தக்கது. திரிஷா, அசின், ஸ்ரேயா போன்ற பெரிய நடிகைகளை பின் னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ஏப்ரலில் விஜயகாந்தின் ‘அரசாங்கம்’ ரிலீஸ்

Thursday, March 13th, 2008

tn_1080313026.jpg

தமிழ் திரையுலகில் ரஜினி, கமலின் 100வது படங்களான ‘ஸ்ரீராகவேந்திரர்’ மற்றும் ‘ராஜபார்வை’ ஆகியவை பரபரப்பாக பேசப்பட்டாலும் வணிக ரீதியாக ஏமாற்றம் அளித்தவை.

ஆனால், விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் சூப்பர் ஹிட். தற்போது விஜயகாந்த் நடித்துகொண்டிருக்கும் ‘அரசாங்கம்’ அவரது 150வது படம். இதையும் வெற்றிப்படமாக்கிவிட வேண்டும் என்று ரொம்பவே மெனக்கிடுகிறார் விஜயகாந்த்.

இதற்காக வெளிநாடுகளுக்கு சென்று சில சர்வதேச குற்றவாளிகளை பிடித்ததோடு, சில பாடல் காட்சிகளையும் படம்பிடித்து வைத்திருக்கிறார்.

ஆனாலும், ஏப்ரலில் ரிலீசாகும் ‘அரசாங்கம்’ விஜயகாந்துக்கு வெற்றியை தேடிதருமா அல்லது அவரை ஏப்ரல் ஃபூல் ஆக்குமா என்பது அடுத்தமாதம் தான் தெரிய ரும்.