Archive for the ‘Tamil Cinema News’ Category

‘பில்லா’வின் சாதனை

Tuesday, March 25th, 2008

0091.jpg

 

அஜித் அவ்வளவுதான் என்று சொன்னவர்களுக்கு பில்லா சரியான பதிலடி கொடுத்திருக்கிறது. பில்லாவுக்கு முன் அஜித் கொடுத்த கடைசி ஹிட் ‘வரலாறு’.
அதன்பிறகு வந்த ‘ஆழ்வார்’, ‘கிரீடம்’ இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் சொல்லும்படியான வெற்றியை பெறவில்லை. அதிலும் ‘ஆழ்வார்’ எதிர்பாராத படுதோல்வியை சந்தித்தது.

அஜித் அவ்வளவுதான் என்று ஆளாளுக்குப் பேசத் தொடங்கியதுபோது பில்லா புராஜெக்ட் டேக் ஆஃப் ஆனது. ரீ- மேக் படம், அதுவும் ரஜினி நடித்தது. அஜித் அதில் என்னச் செய்யப் போகிறார் என ஏளனமும், எதிர்பார்ப்பும் சரிவிகிதத்தில் இருந்தது.

ஏளனத்தை முறியடித்து எதிர்பார்ப்பை நிறைவு செய்தது அஜித்தின் பில்லா. சில நடிகர்களைப் போல காசு கொடுத்து ஓட்டாமலே நூறு நாளை பில்லா கடந்திருக்கிறது.

‘சிவாஜி’க்குப் பிறகு அதிகம் வசூலித்தபடம் என்ற பெருமையையும்  பில்லா பெற்றிருக்கிறது. சென்னையில் மட்டும் ஏறக்குறைய ஐந்து கோடி ரூபாய் வசூலித்துள்ள இப்படம், தொடர்ந்து நூறு நாட்கள் டாப் டென்னில் இடம்பெற்று சாதனை படைத்திருக்கிறது.

பழைய படங்களின் பெயருக்குக் கட்டுப்பாடு

Tuesday, March 25th, 2008

5752ca.jpg

 

அபூர்வ சகோதரர்கள், சதி லீலாவதி, தசாவதாரம் படங்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. கமல் நடித்தப் படங்கள் என்பதைத் தாண்டி இவை அனைத்தும், ஏற்கனவே வெளிவந்த படங்களின் பெயர்கள்.

கமலின் புதிய படம் மர்ம யோகியும் பழைய படத்தின் பெயர் என்பது பலருக்கு தெரியாது. தொடர்ந்து பழைய படங்களின் பெயர்களை வைப்பதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.

புதிய படங்களுக்கு பழைய பெயர்களை வைப்பதை, பழைய படங்களின் தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. தங்கள் படங்களை அவர்கள் ரீ-மேக் செய்ய விரும்பும்போது அதே பெயரில் வேறு கதையை வைத்து ஏற்கனவே படம் வெளிவந்திருக்கும். இது தங்களுக்கு தலைவலியாக இருப்பதாக தயாரிப்பாளர்களும், அவர்களது வாரிசுகளும் புகார் தெரிவித்தனர்.

தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கு கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டது. இனி பழைய படங்களின் பெயர்களை வைக்க விரும்புகிறவர்கள், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடமிருந்து அல்லது அவர்களின் வாரிசுகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும் என நிபந்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

`தசாவதாரம்’ படம் இரண்டு வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது என்பதால் இந்த நிபந்தனை தசாவதாரத்தை கட்டுப்படுத்தாது. அதே நேரம், `மர்ம யோகி’ படத்துக்கு கமல் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அனுமதி வாங்க வேண்டும்.

ராஜ்கிரணின் மலைக்கள்ளன், தனுஷின் படிக்காதவன் படங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமாம்.

வசனகர்த்தா பிரசன்னகுமார் மரணம்

Saturday, March 22nd, 2008

writer_prasanna001.jpg

வெற்றிபெற்ற பல தமிழ் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள எழுத்தாளர் பிரசன்னக்குமார் மரணமடைந்தார். யார்விட்ட சாபமோ தமிழ்த்திரையுலகில் சில மாதங்களாக திரைக்கலைஞர்கள் பலரது கடைசி அத்தியாயம் கிழிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் பாண்டியன், எழுத்தாளர்கள் சுஜாதா, ஸ்டெல்லாபுரூஸ், நடிகர்கள் ரகுவரன், சோபன் பாபுவை தொடர்ந்து பிரபல வசனகர்த்தாவான பிரசன்னகுமாரும் மரண மடைந்தார்.

பாலைவனச்சோலை படம் மூலம் கலையுலகில் காலடி எடுத்துவைத்தவர் பிரசன்னக்குமார். இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ள இவர் விவேக்கிற்கு நீண்ட காலமாக காமெடி டிராக் எழுதிவந்தார். நேற்று திரைக்கு வந்துள்ள ‘சண்டை’, ‘சிங்கக்குட்டி’ ஆகிய படங்களிலும் காமெடி எழுதியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டுவந்த பிரசன்னாவுக்கு திடீரென கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே நேற்றிரவு 10.30 மணிக்கு பிரசன்னாவின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.

49 வயதாகும் பிரசன்னாவுக்கு பானுமதி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். மயிலாப்பூர் கச்சேரி ரோட்டில் உள்ள தேரடி தெருவில் பிரச்சனைவின் வீடு உள்ளது. இவர் மறைந்த தகவல் அறிந்ததும் விவேக் விரைந்து சென்று பிரசன்னாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

‘ரன்’, ‘தை பொறந்தாச்சு’, ‘மனதை திருடிவிட்டாய்’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ள பிரசன்னா, சிறந்த வசனகர்த்தாவாக தமிழக அரசின் விருதும் பெற்றவர்.

தீவிரவாதத்தை ‘அறுவடை’ செய்யும் அதிகாரிகள்!

Friday, March 21st, 2008

37080321115120750.jpg

 

WD

மாலிக் என்ற பெயரில் தீவிரவாதிகள் குழு ஒன்று தென்னிந்தியாவில் ஊடுருவுகிறது. அவர்களின் சதித் திட்டங்களை காவல்துறை அதிகாரியுடன் உதவியுடன் முறியடிக்கிறார் உளவுத்துறை அதிகாரி.

‘ஆபரேஷன் மாலிக்’ என்ற இந்த களையெடுக்கும் வேலைதான் படத்தின் பிரதானப் பகுதி.

கோபி கிருஷ்ணன் என்ற உளவுத்துறை உயரதிகாரியாக மம்மூட்டியும், துடிப்பான காவல்துறை அதிகாரி அன்வர் ஹுசைனாக அர்ஜுனும், நாயகிகளாக சினேகாவும், மம்தா மோகன்தாஸும் நடித்துள்ளனர்.

‘வந்தே மாதரம்’ என்ற பெயரில் மலையாளத்திலும் வெளிவரவுள்ள இப்படத்தை டி.அரவிந்த் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு, சென்னை, கொச்சி, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம், இளையான்குடி, தேங்காப்பட்டணம் பகுதிகளில் நடத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் ஒரு சண்டைக் காட்சி எடுக்கப்பட்டது.

மொத்தம் ரூ.14 கோடி பட்ஜெட்டில் பங்கஜ் புரொடக்சன் ஹென்றி ‘அறுவடை’ செய்துள்ளார்.

‘அறுவடை’ படக்குழு

நடிகர் – நடிகையர் : மம்மூட்டி, அர்ஜுன், சினேகா, மம்தா மோகன்தாஸ், ராஜ்கபூர், மாளவிகா, ரியாஸ் கான், விஜயகுமார், மும்தாஜ், ராஜன் பி. தேவ்.

சண்டைப் பயிற்சி : அனல் அரசு.
ஒளிப்பதிவு : வெற்றி, ராஜேஷ் வைத்யா
இசை : வித்யாசாகர்
பாடல்கள் : வைரமுத்து, பா. விஜய், யுகபாரதி
இயக்கம் : டி.அரவிந்த்

அனல் காற்றில் தபு?

Friday, March 21st, 2008

tabu001.jpg

 

தனது படத்துக்கு சரியான நாயகி அமையாத தவிப்பில் இருக்கிறார் பாலுமகேந்திரா.’அது ஒரு கனாக்காலம்’ படத்துக்குப் பிறகு பாலுமகேந்திரா இயக்கும் படம் ‘அனல் காற்று’ கே.ராஜேஷ்வரின் ‘இந்திரவிழா’ படத்துடன் இதற்கும் தொடக்கவிழா நடத்தப்பட்டது.
ஆனாலும், படப்பிடிப்புக்கு இன்னும் கிளம்பாமலே இருக்கிறார் பாலுமகேந்திரா.

அனல் காற்றில் ப்ரியாமணி நடிப்பார் எனக் கூறப்பட்டது. பிறகு மாளவிகாவின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில், நக்மா நடிக்கிறார் என செய்திகள் அனைத்தையும் மறுத்தார் பாலுமேந்திரா.

அவரது விருப்பம் மேலே உள்ள எந்த நடிகையும் அல்ல. தபு நடித்தால் சிறப்பாக இருக்கும் என பாலுமகேந்திரா நினைக்கிறார். இதுகுறித்து தபுவிடமும் கேட்டகப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அனேகமாக தபு தனது சம்மதத்தை தெரிவிப்பார் என்கிறார்கள்.

‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நடிக்க கவுதம் தபுவை அணுகினார். அந்தவாய்ப்பை தபு மறுக்க, இப்போது அந்த வேடத்தில் சிம்ரன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தத்தளிப்பில் தசாவதாரம் ஆடியோ விழா!

Friday, March 21st, 2008

thasavatharam.jpg

 

அதோ இதோ என்ற தசவாதராம் ஆடியோ வெளியிட்டு விழா, மேலும் சில வாரங்கள் தள்ளிப் போகிறது.தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த எண்ணிய தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
ஜாக்கிசானை விழாவுக்கு அழைத்துவர முயற்சிகள் எடுத்தார். ஜாக்கிசானும் விழாவுக்குவர ஒத்துக்கொண்டார். ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் விழாவை நடத்த ஏற்பாடானது.

திடீரென்று ஏப்ரல் இறுதிக்கு ஆடியோ வெளியீட்டு விழா தள்ளிப் போயுள்ளது. ஏன் எதற்கு என்ற காரணம் இதுவரைச் சொல்லப்படவில்லை. படவேலைகள் முடியாததே இதற்கு காரணம் என படக்குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தார்கள்.
ஆடியோ வெளியீடு தள்ளிப்போவதால் படத்தின் ரிலீஸூம் பல வாரங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. மே மாதம் கமலின் தசாவதாரங்களை தரிசிக்கலாம் என காத்திருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பார்வையற்றவராக நடிக்கும் பசுபதி

Friday, March 21st, 2008

pasupathy001.jpg

 

‘வெயில்’ படத்திற்கு பிறகு பசுபதியின் கேரியர் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ‘வெடிகுண்டு முருகேசன்’, ‘குசேலன்’, ‘ராமன் தேடிய சீதை’ என தான் நடிக்கும் எல்லா படங்களிலும் கதையின் நாயகனாக பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்திருகிறாராம்.
‘குசேலன்’ படத்தில் பசுமதிதான் ஹீரோ. நான் வெறும் 25 சதவீதம்தான் என ரஜினி சொன்ன வார்த்தைகள் பசுபதிக்கு மேலும் ஊட்டம் கொடுத்துள்ளது.

‘ராமன் தேடிய சீதை’ படத்தில் சேரன்தான் கதாநாயகன் என்றாலும் ரசிகர்கள் ஆழமாக பதியும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் பசுபதி. “இதுவரை என் கேரியரில் இப்படியொரு கேரக்டரில் நடித்ததில்லை. நாடகங்களில்கூட இந்தமாதிரி கதாபாத்திரத்தில் நடித்ததில்லை” என்னும் பசுபதி அந்த கேரக்டரின் ரகசியத்தை மட்டும் சொல்லாமல் மறைந்துவருகிறார்.

ஆனால் அவர் நடிப்பது பார்வையற்ற கதாபாத்திரம் என்பது தெரிந்துவிட்டது. இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய ஹோம் வொர்க் செய்து நடித்துள்ளாராம் பசுபதி.

இதுபோன்ற கேரக்டர் சாதாரண விஷயம் இல்லை என்பதால் கமல் நடித்த ‘ராஜபார்வை’, விக்ரம் நடித்த ‘காசி’, அமிதாப்பச்சன் நடித்த ‘பிளாக்’ ஆகிய படங்களை அடிக்கடி பார்த்து சில மேனரிஷங்களை கற்றுக்கொண்டாராம்.

வைத்தீஸ்வரன்

Friday, March 21st, 2008

vaitheesvaran001.jpg

 

படத்தில் சாலமன் பாப்பையா இல்லாத குறைதான். மறுஜென்மம் உண்டா இல்லையா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்த பொருத்தமான கதை.
அரசியல்வாதியான ஷாயாஜிஷிண்டே கோயில் நகைகளை கொள்ளையடிக்கிறார். இதை பார்க்கும் சரவணன் என்ற சிறுவனை கொலை செய்கிறார். மகன் போன இடத்துக்கே போக தற்கொலைக்கு முயலும் சரவணனின் தாயை தடுத்து நிறுத்துகிறார் ஜோதிடரான விஜயகுமார்.

“சரவணன் மறுபிறவி எடுப்பான்; அதுவரை காத்திரு” என்பவர் “சரவணன் கையால்தான் ஷாயாஜிஷிண்டேவுக்கு சாவு” என ஆரூடம் கூறி்ச்செல்ல அடு்த்தடுத்த காட்சிகளில் அனல் பற்ற ஆரம்பிக்கிறது. விஜயகுமார் சொல்வது பலிக்கிறதா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.

சரவணன் மறுபிறவி எடுப்பான் என்று கூறும்போதே அது ஹீரோ சரத்தாகதான் இருப்பார் என்பதை சிறுபிள்ளைகள் கூட சொல்லிவிடமுடியும்.  எனினும் திரைக்கதையில் ஆங்காங்கே போடும் முடிச்சுகளால் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது படம்.

மருத்துவரான சரத்திடம் நீதான் சரவணனின் மறுபிறவி என விஜயகுமார் சொல்வதும், அதில் நம்பிக்கையின்றி சரத்குமார் செய்யும் தர்க்கமும் சூடான சுவாரஸ்யம். சீரியஸாக கதை ஆரம்பமாகும் நேரத்தில் காதலி மேக்னா நாயுடு பற்றி நண்பனிடம் விளக்கவுரை சொல்வது டாக்டர் கேரக்டரை ஆபரேஷன் செய்கிறது.

இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து தவமிருக்கும் தாய், மறுபிறவி உண்டா, இல்லையா என்ற கேள்விக்கு விடையின்றி தொடரும் குழப்பம் எல்லாம் சேர்ந்து இது பக்தி படமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.

இன்ஸ்பெக்டர் ரியாங்கானை கொலைசெய்ய கையாளும் டெக்னிக், சரவணன் யார் என்பதில் குழப்பத்தை ஏற்படுத்த நடத்தும் ஆள்மாறாட்ட கேம் ஆகியவை சூப்பர் ஐடியாக்கள்.

டி.வி. காம்பீயராக காட்டப்படும் மேக்னாநாயுடு, திடீரென ரிப்போட்டர் கேரக்டருக்கு மாறுவது லாஜிக் சறுக்கல். பாடல் காட்சிகளில் தாராளம் காட்டுவதை தவிர நடிப்பில் பாராட்டும்படியான அம்சங்கள் இல்லாததால் மேக்னா வெரி வீக்னா.

நிலநடுக்கம், சுனாமி வருவதுகூட எதிர்க்கட்சிகளின் சதி என ஷாயாஜி கர்ஜிக்கும் இடத்தில் தியேட்டரில எழும் கிளாப்ஸ் வி்ல்லனை காமெடியனாக்குகிறது.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் எல்லாமே கேட்ட நிமிடமே மறந்துவிடுகிறது. ஒளிப்பதிவாளரின் பணி நிறைவு.

‘மறுஜென்மத்தை நம்புபவர்களுக்கு இவன் சரவணன்’; ‘நம்பாதவர்களுக்கு பாலா’ என இயக்குனர் விடை சொல்லி நழுவுவது புத்திசாலித்தனம்.

வைத்தீஸ்வரனை பார்க்கலாம்.

பிரபல நடிகர் சோபன் பாபு மரணம்

Friday, March 21st, 2008

33b2e34119efdd0f9e480dcabab6e.jpg

பிரபல தெலுங்கு நடிகர் சோபன் பாபு இன்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.

வீர அபிமன்யு திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் சோபன் பாபு. இவர் ஏராளமான தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் தமிழ், கன்னட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளன.

துவக்கம் முதலே சென்னையில் தங்கியிருந்த சோபன்பாபு யோகாசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இன்று காலை யோகாசனத்தில் ஈடுபட்டிருந்த போது, திடீரென்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

ஆந்திர மாநில அரசின் நந்தி விருது, ஃபிலிம்பேர் விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

சோபன் பாபுவின் மறைவு குறித்து தெலுங்கு திரையுலகினர் மட்டுமின்றி தமிழ்த் திரையுலகினரும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

போதை பழக்கத்தால் உடல் நலம் பாதிப்பு; நடிகர் ரகுவரன் “திடீர்” மரணம்

Wednesday, March 19th, 2008

raguvaran001.jpg

 

தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வில்லன், குணசித்திர வேடங்களில் 300 படங்களுக்கு மேல் நடித்த ரகு வரன் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.
ரகுவரனுக்கு போதை பழக்கம் இருந்தது. கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். டாக்டர்கள் மது அருந்ததக்கூடாது என எச்சரித்தனர். சிகிச்சைக்கு பின் உடல் தேறினார். தற்போது சில படங்களில் நடித்து வந்தார். மீண்டும் குடிப்பழக்கத்துக்கு ஆளானார்.

raguvaran002.jpg

 

இதையடுத்து உடல்நிலை மிகுந்த பாதிப்புக்கு உள்ளா னது. சேத்துப்பட்டில் உள்ள மேத்தா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.ரகுவரன் வில்லன், குண சித்திர வேடங்களில் கலக்கியவர். கத்தி, ரத்தம், மூர்க்கத்தனமான சண்டை கள்தான் வில்லன் வேடத்துக்கு தேவை என்பதை உடைத்து அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாதாரண மனிதனாக வந்து வில்லத்தனத்தை கச்சிதமாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழில் “ஏழாவது மனிதன்” படத்தில் அறிமுகமானார். “சம்சாரம் அது மின்சாரம்” படத்தில் குணசித்திர வேடத் தில் கலக்கினார். “புரியாத புதிர்” படத்தில் சைக்கோ கணவராக இவர் பேசிய `ஐநோ ஐநோ’ வசனம் பிர பலம். “நேருக்கு நேர்”, “அஞ்சலி” படங்களில் முக்கிய வேட மேற்றார். “முதல்வன்” படத் தில் இவரது முதல்-மந்திரி பாத்திரம் பேசப்பட்டது.

ரஜினி படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். “ராஜா சின்ன ரோஜா”, “முத்து” சமீபத்தில் வெளியான “சிவாஜி” படத்தில் வந்தார். “பாட்ஷா”வில் இவர் நடித்த “மார்க் ஆண்டனி” கேரக்டர் பாப்புலர்.

கடைசியாக விக்ரமுடன் “பீமா”வில் நடித்து இருந்தார். தற்போது “இந்திர விழா” என்ற படத்தில் நடித்துக் கொண் டிருந்தார். டெலிவிஷன் தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

ரகுவரனுக்கும், நடிகை ரோகிணிக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர்களுக்கு நந்தா என்ற குழந்தை உள்ளது.

தியாகராய நகர் ஜெகதாம் பாள் தெருவில் உள்ள வீட்டில் தற்போது தனியாக வசித்து வந்தார்.

ரகுவரன் உடல் அவரது வீட்டில் இன்று பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. நாளை
இறுதிசடங்கு நடக்கிறது.