Archive for the ‘Cine Interviews’ Category

எனக்குப் பொருந்தும் வேடங்களை ஏற்பேன்: கனல் கண்ணன்

Friday, March 7th, 2008

e.jpg5ea8c914971aaedddc2b8de32e26.jpg

 

தமிழ்த் திரையுலகில் ஸ்டண்ட் மாஸ்டராக நன்கு அறியப்பட்டவர் கனல் கண்ணன். இவர் இப்போது ‘சற்று முன் கிடைத்த தகவல்’ படத்தின் மூலம் கதாநாயகனாகி இருக்கிறார். ‘பீமா’வில் சண்டைகளின் பின்னணியில் மாஸ்டராக இருந்தவர்.

கதாநாயகன் அந்தஸ்து பெற்றுள்ள கனல் கண்ணனுடன் ஒரு சந்திப்பு….

சினிமாவில் நுழையும்போதே நடிக்கும் எண்ணம் இருந்ததா?

இல்லை. எனக்கு சொந்த ஊர் நாகர்கோவில் பக்கம் வள்ளியாபுரம். அந்தக் கிராமத்திலிருந்து சென்னை வந்து சினிமாவில் சேர்ந்தேன். நான் முதலில் சண்டை இயக்குனராக வேண்டும் என்றுதான் விரும்பினேன். என் குரு ராம்போ ராஜ்குமார். அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். இந்த ஸ்டண்ட் துறையில் புகழ் பெறவே விரும்பி, அதுபோலவே ஆனேன்.

என்னை ஒரு மாஸ்டராக அறிமுகப்படுத்தியது கே.எஸ். ரவிகுமார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த ‘சேரன் பாண்டியன்’ படத்தில்தான் நான் முதல்முறையாக ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமானேன். தற்போது 200 படங்களை முடித்து விட்டேன்.

நிஜமாகவே ஆரம்பத்தில் நடிக்கும் ஆசை இல்லை. ஓரிரு படங்களில் விளையாட்டாகத் தலைகாட்ட வைத்தார்கள். அதைப் பார்த்து என்னை அடையாளம் கண்டு ஆரவாரம் செய்யத் தொடங்கியதும் எனக்குள் நடிப்பு ஆசை வேர் விட்டது. சிறு சிறு வேடங்களில் நடித்தேன். அவார்டுக்காக ஒரு படம் எடுத்தார்கள். ‘டியூப்லைட்’ என்பது பெயர். அதில் நான்தான் முக்கிய வேடம்.

‘சற்றுமுன் கிடைத்த தகவல்’ வாய்ப்பு எப்படி வந்தது?

தக்காளி சீனிவாசன் சார் என்னை கூப்பிட்டுக் கொடுத்த வாய்ப்புதான் இது. ஆரம்பத்தில் சற்று தயங்கினேன். அவர் கொடுத்த ஊக்கத்தில் நானும் நன்றாக நடித்து, அவரது பாராட்டைப் பெற்று விட்டேன். என்மேல் நம்பிக்கை வைத்து இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்ததற்காக அவருக்கு நான் என்றும் நன்றி சொல்வேன். அந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருடன் காமடியும் கலந்ததாக இருக்கும். எனக்கு அது பொருத்தமாக இருந்ததால் படம் நன்றாக வந்திருக்கிறது. த்ரில்லர் படம் காமடியாகவும் இருப்பது அபூர்வம். அது இதில் சாத்தியமாகியிருக்கிறது.

இனி தொடர்ந்து நாயகனாக நடிப்பீர்களா?

என்னைப் பற்றி கே.எஸ்.ரவிகுமார் சார் பேசும்போது, ‘உனக்கு எது பொருத்தமோ அதை தேர்வு செய்து நடி. உன் முகத்துக்கு எது தேவையோ அதை ஏற்று நடித்தால் வெற்றி பெறுவாய்’ என்றார். அதை நான் மறக்க மாட்டேன். எனக்குப் பொருத்தமாக உள்ள வேடங்களை மட்டுமே ஏற்று நடிப்பேன். இந்த ‘சற்றுமுன் கிடைத்த தகவல்’ படத்துக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே நடிப்பில் தீவிரமாக இறங்குவது பற்றி யோசித்து முடிவெடுப்பேன்.

எல்லா கதாநாயகர்களுக்கும் ஸ்டண்ட் அமைத்து விட்டீர்களா?

தமிழ்நாட்டில் ரஜினி, கமல் தொடங்கி சிம்பு வரை மாஸ்டராக பணியாற்றி விட்டேன். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி வரை தெலுங்கில் சிரஞ்சீவி போன்ற முக்கியமான எல்லாருடனும் பணியாற்றிய அனுபவம் உண்டு. கன்னடத்திலும் அப்படித்தான். ஆனால் எனக்கும் ஒரு குறை உண்டு. நான் இன்னும் விஜயகாந்த் படங்களில் மட்டும் ஸ்டண்ட் மாஸ்டராக வேலை பார்த்ததில்லை. காரணம் அவர் தனக்கென தனி மாஸ்டரை வைத்திருக்கிறார். அதனால் எனக்குப் பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை.

‘பீமா’வில் ஆங்கிலப் படங்களைப் போல சண்டைகள் அமைத்தது எப்படி?

எனது எல்லாத் திறமையும் எனக்குத் தொழில் கற்றுக் கொடுத்த குரு ராம்போ ராஜ்குமாரையே சேரும். என்னை `கனல்’ கண்ணன் என்று பெயர் வைத்ததே அவர்தான். நான் என் குருவிடமும் அனுபவங்கள் மூலமும் படங்களைப் பார்த்தும் கற்றவற்றையே என் படங்களில் வெளிப்படுத்துகிறேன்.

‘பீமா’ படத்தின் சண்டைக்காட்சிகள் பேசப்படுகின்றன. பலபேர் பாராட்டுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் நான் மட்டுமல்ல. முழு ஒத்துழைப்பு கொடுத்த விக்ரம், எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து அனுமதித்த இயக்குனர் லிங்குசாமி, செலவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் களம் அமைத்துக் கொடுத்த தயாரிப்பாளர் ரத்னம், இப்படி பலரின் உழைப்பால் ஒத்துழைப்பால்தான் ‘பீமா’ இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது.

இப்போது பணியாற்றும் படங்கள்?

நான் நடித்தாலும் மாஸ்டராக பணியாற்றுவதை விட மாட்டேன். ‘சற்றுமுன் கிடைத்த தகவல்’ படத்தில் நடித்தபோது கூட என் மாஸ்டர் கமிட்மெண்ட்களை தேதிகளை அனுசரித்து விட்டுத்தான் நடித்தேனே தவிர மாஸ்டர் வேலையை விட்டுவிடவில்லை. இப்போது ‘கந்தசாமி’, ‘சிலம்பாட்டம்’, ‘எல்லாம் அவன் செயல்’ ஏவிஎம் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படம் உள்பட ஏழு படங்களில் நான் மாஸ்டராக ஸ்டண்ட் அமைத்து வருகிறேன்.

Srikanth treads Vishal’s path?

Friday, March 7th, 2008

2_194.jpg

After maintaining a low profile for years, looks like Srikanth’s career is swiftly on an uphill now. He has recently signed on the dotted line for movies like Poo, Indira Vizha, Ettappan and yet another bilingual Tamil-Telugu action movie. Touted to be a cop story, this yet-to-be-named bilingual movie will have debutant director Manmohan calling the shots.  
 
Prithvi Raj is also said to be a part of the movie that will have Kamili Mukherjee donning the role of Srikanth’s arm candy.

Srikanth will undergo guidance of sorts under the auspices of a noted official from the police department in Andhra Pradesh to learn the nuances of being a cop. It is hard to forget news about Vishal undergoing one such training for his cop flick Sathyam recently.

Decision to produce the movie simultaneously in Tamil and Telugu comes in the wake of Srikanth’s dubbed movies being received with positive response at the Telugu box office.

தேடி வரும் வாய்ப்புக்கு மரியாதை தருவேன்- பசுபதி

Friday, March 7th, 2008

b22cbbc58ae362228a92ad1ec8933.jpg9098863dd14acf3cdfa0a3aa9fde5e.jpg

 

தமிழ் ரசிகர்கள் மனதில், ஓசைப்படாமல் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து வருபவர் நடிகர் பசுபதி. நட்சத்திர நடிகர்களின் மத்தியில் தனக்கான இடத்திற்கு போட்டியிடாமல்,  நட்சத்திர தகுதியுள்ள கதைகளில் நடிப்பதன் மூலம் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்று வருகிறார். ‘விருமாண்டி’யில் கமலுடன் நடித்து வியக்க வைத்தவர், ‘குசேலர்’ படத்தில் ரஜினியுடன் நடிக்கிறார்…

வெடிகுண்டு முருகேசனில் தற்போது நடித்து வரும் அவருடன் ஒரு சந்திப்பு…

குறுகிய காலத்தில் ரஜினியுடன் நடிக்க உள்ள ‘குசேலர்’ வாய்ப்பு பற்றி?

ரொம்ப சந்தோஷமாவும், மனசுக்கு நிறைவாவும் இருக்கு. ஏற்கனவே கமல் சாருடன் நடிச்சதன் மூலம் எனக்கு அழுத்தமான அடையாளம் கிடைச்சுது. அடுத்து விக்ரம் சாருடன் ‘மஜா’விலும் புதிய அங்கீகாரம் கிடைச்சுது. இப்போ சூப்பர் ஸ்டார் ரஜினி சாருடன் நடிக்கிற வாய்ப்பு.

இந்தப் படம் மூலம் நான் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம், பட்டி தொட்டியெல்லாம் போய்ச் சேர்ந்திடுவேன்னு சொல்லலாம்.

குசேலர் படத்தில் நீங்கள் தான் கதாநாயகனா… படத்தின் கதை என்ன?

‘குசேலர்’ படத்தில் எனக்கு முக்கிய வேடம்னு சொல்லலாம். என்னைச் சுற்றியும் கதை நகரும். மற்றபடி அது அவருடைய (ரஜினி சார்) படம் தான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். கதையும் கேரக்டரும் பிடிச்சிருந்ததால் தான் நடிக்க சம்மதிச்சேன்.

‘வெயில்’ அனுபவம் எப்படி?

நல்ல கதையிருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம்னு நிரூபிச்ச படம். வாழ்க்கையில் தோல்வியடைஞ்ச ஒருத்தன் கதையை எடுத்து சினிமாவில் ஜெயிக்க முடியும்னு காட்டிய படம்.

‘வெயில்’ படத்தைப் பொறுத்தவரை அந்தக் கதையும் என் கேரக்டரும் எனக்கு ரொம்பவும் பிடிச்சுது, நம்பிக்கையா இருந்தேன். இப்படி நல்ல கதையும் கேரக்டரும் கிடைக்கிற போது என் பொறுப்பு தானா அதிகமாகுது.

வில்லனிலிருந்து கதாநாயகன் ஆகிவிட்டீர்கள். இனி இதுதான் தொடருமா?

இன்னைக்கு மட்டுமல்ல நாளைக்கும் இதையே சொல்வேன், நான் டைரக்டரோட ஆர்ட்டிஸ்ட். அவங்க கதைக்கு தேவையானதை செய்றது என் வேலை, பொறுப்புன்னு நினைக்கிறவன் நான். ஹீரோ, வில்லன்கிற எதிர்பார்ப்பில் அடங்காத நடிகனா வரவே எனக்கு விருப்பம். எப்படி நடிக்கிறதுன்னு நான் முடிவு பண்றதில்லை. கதைதான் முடிவு செய்யும். ஒரு படத்தில் பலரின் உதவி தேவை. என் வேலை மட்டுமே என் பங்குன்னு சொல்வேன். எனக்கு எது சரியா வருமோ அதை மட்டுமே நான் செய்வேன்.

‘வெடிகுண்டு முருகேசன்’ படத்தில் உங்களுடைய பங்கு பற்றி?

கதையில் முக்கிய கேரக்டர்னு தான் சொல்வேன். வெடிகுண்டு என்று சொன்னதும் ஏதோ குண்டு, சண்டை, சச்சரவு, வன்முறைன்னு நினைக்க வேண்டாம். அதிர்ச்சியான சின்ன தகவல் சொன்னால் கூட என்னடா குண்டைத் தூக்கிப் போடறேன்னு சொல்வாங்கல்லையா? அப்படி ஒரு யதார்த்தத்துக்காக வச்ச பேருதான் இது.

படத்தில் குண்டு வெடிக்காது. சிரிப்பு வெடிகள் மட்டுமே. மனிதனை மிருகத்தில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவது சிரிப்பு தான். அந்த வகையில் சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படற படம்.

கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவுக்கு வந்த நீங்கள், மசாலா சினிமா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நாடகம் வேறு, சினிமா வேறு. இரண்டும் இருவேறு மொழின்னு கூட சொல்லலாம். நாடகம் பார்க்கும் ரசிகர்கள் குறைவு. சினிமா பார்க்கும் ரசிகர்கள் அதிகம். இரண்டிலும் நடிக்க வேண்டும். முயற்சிகள் இரண்டிலும் தேவைதான். சினிமாவில் பல ரகம் உண்டு. நான் கதையோடு சேர்ந்து ரசிகர்களின் மனதில் பயணம் செய்கிற நடிகனா இருக்கவே ஆசைப்படறேன்.

காமெடியன், வில்லன், ஹீரோ… எதில் நடிப்பது உங்களுக்கு சுலபம்?

ஹீரோ-வில்லன் பாகுபாடு என்பதை விட, முயற்சி தான் முக்கியம் என்று நம்புபவன் நான். எப்படிப்பட்ட கேரக்டரில் நடிப்பை வெளிப்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். எனக்குன்னு எந்த இமேஜும் கிடையாது.

நீதான் ஹீரோ… படம் பூரா வரலாம்னு சொல்லிட்டு மரத்தைச் சுற்றி ஆடுன்னா என்னால ஆட முடியாது. இந்த 4 பாட்டு, சண்டை சமாச்சாரத்திலும் எனக்கு ஆர்வம் கிடையாது.

‘வெயில்’ படத்தில் நீங்கள் நடித்த பாத்திரத்தின் பெயர் முருகேசன். இந்த பெயருக்கும்,  வெடிகுண்டு முருகேசனுக்கும் சம்பந்தம் உண்டா?

அப்படியெல்லாம் இல்லைன்னு தான் டைரக்டர் சொல்றார். சாதாரணமா எளிமையா இருக்கட்டும்னு தான் அப்படி வச்சிருக்காராம். நான் இதை வையுங்கனு சொல்லலை. அவர் சாதாரணமா ரோட்டில் போகிற ஒருத்தரை நினைச்சப்போ பசுபதி தான் மனசுல நின்னார்னு சொல்லி என்னைத் தேர்ந்தெடுத்தாராம். இப்படி தேடி வர்ற வாய்ப்புக்கு நான் மரியாதை தர விரும்பறேன்.

இமேஜைக் கடந்து நடிக்க விருப்பம் – நரேன்

Friday, March 7th, 2008

631c9e9f3aaf09b4f37f319a83980.jpg

 

சித்திரம் பேசுதடி மூலம் ரசிகர்கள் நெஞ்சில் அழியாத சித்திரமாக பதிவாகி விட்ட நரேன், `பள்ளிக்கூடம்’ மூலம் நம்மில் ஒருவராகி `அஞ்சாதே’ மூலம் அழுத்தமான அங்கீகாரம் பெற்று விட்டார்.

அஞ்சாதே படத்திற்கு பாராட்டு மழை குவிந்து வரும் நிலையில், அவருடன் ஒரு நேர்காணல்….

மீண்டும் மிஷ்கினுடன் இணைந்த அனுபவம் பற்றி?

ரொம்ப சந்தோஷமா இருக்கு. மனநிறைவா இருக்கு. மனசுக்குப் பிடிச்சவங்களோட வேலை பார்க்கிறது தனி சுகம்தான். சித்திரம் பேசுதடி மூலமா எனக்கொரு முகவரி தேடிக் கொடுத்தவர் மிஷ்கின். ஒரு டைரக்டரா இருந்தவர் தற்போது நெருங்கிய நண்பராகி விட்டார்.

முதல்படத்தில் அவர் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளையா இருந்தவன், இந்தப் படத்தில் பல கேள்விகள் கேட்டேன். எனக்கு சினிமா மீது வந்து விட்ட ஆர்வமும், ஈடுபாடும்தான் அதற்குக் காரணம். மிஷ்கின் ஒரு தீவிர படைப்பாளி. எல்லார்கிட்டயும் மிஷ்கின் போல தனி சுதந்திரம் எடுத்துக்க முடியாது.

நரேன் என் சொத்து என்று மிஷ்கின் கூறியிருக்கிறாரே?

அது அவரோட பெருந்தன்மை. அவரோட நல்ல மனசை இது காட்டுகிறது. அவர் இல்லையென்றால் நான் இல்லை. என்னைப் பெருமைப்படுத்துற விதமாக அவர் அப்படி சொல்லியிருக்கிறார். இதன்மூலம் நல்ல படங்களில் நடித்து என்னோட இமேஜை உயர்த்தணும்கிற எண்ணம் வந்திருக்கு.

`பள்ளிக்கூடம்’ அனுபவம் எப்படி?

அது மறக்க முடியாத படம். ரசனையை மேம்படுத்துற மாதிரியும், கமர்ஷியலா ஜெயிக்கிற மாதிரியும் அமைஞ்ச படம். தங்கர்பச்சான் ஒரு திறமையான இயக்குனர். பள்ளிக்கூடத்தில் நடிச்சப்போ, ஏன் இந்தக் காட்சியை எடுக்கிறார்னு தோணும். ஆனால் படம் வெளிவந்தபோது அவ்வளவு அழகாக அந்தக் காட்சியை காட்டியிருப்பார்.

அந்தப் படத்திற்காக காடு, மேடுன்னு கிராம மக்களோடு, மக்களாக அலைஞ்சு திரிஞ்சது மறக்க முடியாத அனுபவம். எல்லாப்படத்திலும் வர்ற கலெக்டர் மாதிரி காட்டாமல், அவருக்குள்ளும் உணர்வு, காதல் உண்டு என்பதை தங்கர் காட்டியிருப்பார். பல உணர்வுகளை வெளிப்படுத்த் வாய்ப்பா அமைஞ்ச படம் பள்ளிக்கூடம்.

அடுத்தடுத்து படங்கள் வருவதில் ஏன் இவ்வளவு இடைவெளி?

தமிழில் இடைவெளி வந்தப்போ, மலையாளம் பக்கம் போய் சில படங்கள் செஞ்சேன். பள்ளிக்கூடம் வெற்றிக்குப் பிறகு பல வாய்ப்புகள் வந்த போதிலும், நம்பிக்கையான வாய்ப்புகளாக இல்லாததால் மறுத்து விட்டேன்.

தேடி வரும் வாய்ப்புகளை இப்படி மறுப்பது சரியா?

நான் தேர்வு செய்து நடிக்கும் ஒவ்வொரு படங்களும் என் கேரியரை உயர்த்துவதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இருக்கிற பேரை காப்பாற்ற வேண்டும். நல்ல படங்களுக்காக பொறுமையா காத்திருப்பேன். அவசரப்பட மாட்டேன்.

எந்த மாதிரி கேரக்டரில் நடிக்க விரும்புகிறீர்கள்?

எனக்குன்னு கிடைக்கிற வாய்ப்பை இன்னொருத்தர் தட்டிப் பறிச்சிட முடியாதுன்னு நினைக்கிறேன். நான்தான் இந்தக் கேரக்டருக்குப் பொருத்தம்னு டைரக்டர்கள் நம்புற கேரக்டர்களில் நடிக்க ஆசை.

எப்படிப்பட்ட இமேஜில் விருப்பம்?

இமேஜூக்கு அப்பாற்பட்ட ஒரு நடிகனா வரவே ஆசைப்படுகிறேன். எந்த வட்டத்திற்குள் சிக்காத நடிகனாக வரவே விரும்புகிறேன்.

லட்சியக் கேரக்டர் நடிகனுக்கு இருக்கக்கூடாது – மம்முட்டி

Friday, March 7th, 2008

mamooty_150.jpg

நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் நடிக்கிறார் மம்முட்டி. அவர் இப்போது நடிக்கும் படம் ‘அறுவடை’. படப்பிடிப்பிலிருந்தவரை அண்மையில் சந்தித்தபோது…

மலையாளத்திலிருந்து நீங்கள் ஹீரோவாக தமிழுக்கு வந்தீர்கள். இப்போது அங்கிருந்து நிறைய கதாநாயகிகள் வருகிறார்களே அதுபற்றி…?

இது சகஜம். அங்கிருந்து இங்கு வர்றது. இங்கிருந்து அங்கே போறது அப்பப்போ நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. தமிழ், மலையாளம் தொடர்புகள் ரொம்ப நாளா இருந்துக்கிட்டுத்தான் இருக்கு.

இந்தத் தொடர்பு எந்த அளவுக்கு உள்ளது?

மலையாளம் இளமையான மொழி. தமிழ்தான் பாலி மாதிரி காலத்தால் மூத்த மொழி. தமிழ் இல்லாம மலையாளம் பேச முடியாது. ஏன்னா தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்துதான் மலையாளம்.

மலையாளம் வந்து இன்னைக்கு சுமாரா ஐநூறு வருஷமாகுதுன்னா, தமிழ் வந்து ஐயாயிரத்துக்கும் மேல வருஷங்கள் ஆகுதுங்கறாங்க. அவ்வளவு மூத்தது தமிழ் மொழி. தமிழ் கலந்துதான் மலையாளமே பேசப்படுது. அந்த அளவுக்கு மொழிப் பிணைப்பு, மக்கள் பிணைப்பு இருந்துக்கிட்டிருக்கு.

தமிழ் திரையுலகில் உங்களுக்கு நண்பர்கள் யார்?

நான் எல்லாரையும் நண்பர்களாத்தான் பார்க்கிறேன். எல்லாரும் எனக்கு நண்பர்கள்தான். ஒவ்வொரு படத்துல நடிக்கும்போது அவங்க நெருக்கமான நண்பர்கள் ஆவாங்க. இப்ப ‘அறுவடை’ படத்தின் மூலமா என் கூட நடிக்கிறதால அர்ஜுன் என் நண்பராய்ட்டார்.

ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் எதை முக்கியமாகப் பார்ப்பீர்கள்?

படம் நல்லா வரணும். நம் கேரக்டர் நல்லா வரணும்னுதான் நினைப்பேன். ஒவ்வொரு படமும் எனக்குப் புதுப்படம் தான். அதாவது எல்லாப் படமும் எனக்கு முதல் படம் மாதிரித்தான்.

‘அறுவடை’ படத்தில் உங்கள் பாத்திரம் என்ன..?

நான் இதில் ஐபிஎஸ் ஆபீசரா வர்றேன். இது பற்றி மேலும் விவரம் கேட்டால் டைரக்டர், புரொடியூசரைத்தான் நீங்க கேட்கணும். நான் நடிக்கிற படத்தோட கதையை நானா சொல்றது கிடையாது.

விருதுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?விருதுகள் கொடுக்கிறது நல்ல விஷயம்தான். எந்த விருதா இருந்தாலும் அது நம்ம வேலையை மதிச்சு தொழிலை மதிச்சு கொடுக்கிறப்போ அதை சந்தோஷமா ஊக்கப்படுத்துறதாத்தான் எடுத்துக்கணும்.

உங்கள் திறமைக்கேற்ற விருதுகள், அங்கீகாரம் கிடைத்துவிட்டனவா…?

எல்லாம் நினைக்கிறமாதிரி கிடைக்காது. கொடுக்கிறவங்கதான் இதுபற்றி நினைக்கணும். தகுதி வந்தால் அது வரும்னு நம்பறேன். எனக்கும் கொஞ்சம் அங்கீகாரம் கிடைச்சிருக்குன்ற சந்தோஷம் இருக்கு. அது எந்த அளவுக்கு முழு அளவுக்கான்னு சொல்லத் தெரியலை.

அம்பேத்கார் பாத்திரத்தில் நடித்தீர்கள் அது பற்றி…?

ஏன் அது தப்பா? என்னைத் தேடி வந்த வாய்ப்பு இது. நான் கூட முதலில் மறுத்தேன். பிறகு என்னை நடிக்க வச்சாங்க. நான் பண்ணின படங்களில் அது ஒண்ணு.

இது மாதிரி இன்னொரு தலைவர் பாத்திரத்தில் நடிப்பீர்களா?

அது ஒண்ணே போதும். இனி அப்படி நடிக்கமாட்டேன்.

வேறு ஏதாவது லட்சிய பாத்திரம் மனசுக்குள் இருக்கிறதா?

என்னைக் கேட்டால் லட்சியம்னோ லட்சியக் கேரக்டர்னோ ஒரு நடிகனுக்கு இருக்கக் கூடாதுன்னு சொல்வேன். அந்த வாய்ப்பு கிடைச்சிட்டா ரிடையர்டு ஆகிப் போய்டுவாங்களா? அதுதான் லட்சியம்னா அத்தோட முடிஞ்சிடும்தானே…?

மலையாளத் திரையுலகம் எப்படி இருக்கிறது?

நல்லா இருக்கு. தமிழ்நாடு மாதிரி அங்கும் திரையுலகம் நல்லாத்தான் இருக்கு. சில ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். அது சகஜம். மற்றபடி நல்லா இருக்கு.

திருட்டு விசிடி பிரச்சினை அங்கு இருக்கிறதா?

திருட்டு விசிடி பிரச்சினை மலையாளத்தில் மட்டுமல்ல. உலகம்பூரா இருக்கு. சினிமாங்கிறதை திரையில் பார்த்தால்தான் முழு சந்தோஷம். சின்னப் பெட்டிக்குள்ள சீரியல் பார்க்கலாம். சினிமா பார்த்தால் திருப்தி வராதுன்னு நாமதான் எடுத்துச் சொல்லணும். திருட்டு விசிடி பார்க்கிறவன் தியேட்டருக்கு வரமாட்டான்.

இதை ஒழிக்க முடியாதா?திருட்டு விசிடியில படம் பார்க்கிறவன் அப்படியே பழகிய சோம்பேறி. அவன் எப்பவும் தியேட்டருக்கு வரமாட்டான். ஏன்னா இருந்த இடத்திலேயே படம் பார்க்க நினைக்கிறவன்.

சினிமான்னா வீட்டை விட்டு வெளியே போய் தியேட்டர்ல கியூவுல நின்னு டிக்கெட் எடுத்து பெரிய திரையில் பார்க்கிற அனுபவம் தனியான சந்தோஷம். அது வீட்டுக்குள்ளிருக்கிற பெட்டியில வருமா?

இன்று எண்டர்டெய்ன்மெண்ட் உலகம் வளர்ந்திருப்பது சினிமாவுக்கு சவாலா?

எல்லாமே வளருது. அந்த தாக்கம் சினிமாவிலும் இருக்கே. இப்போ புதுசா புதுசா மல்டிப்ளக்ஸ் தியேட்டர்ஸ் வருதில்லையா? எண்டர்டெய்ன்மெண்ட் வளர்றது சினிமாவுக்கும் உதவுதில்லையா?

இத்தனை படத்தில் நடித்துள்ளீர்கள். அந்த அனுபவத்தை வைத்துப் படம் இயக்கும் ஆசை உள்ளதா?

ஆசை மனசுக்குள்தான் இருக்கு. டைரக்‌ஷன் ஆசை மனசோடு இருக்கும். அவ்வளவுதான். இந்த ஆசை உள்ளுக்குள் மட்டுமே இருக்கும்.

சுயசரிதை எழுதும் எண்ணமுண்டா?

என் கதையை அப்பப்போ எழுதியிருக்கேன். என் அனுபவங்கள் ஆறு புத்தகங்களா வந்திருக்கு. சமீபத்துல கூட ஒண்ணு வந்திருக்கு.

கதை எழுதும் ஆர்வமுண்டா?

நான் கதை எழுதுவேன். ஆனா அது ஒரு வரிதான் இருக்கும். சினிமாவுல சொல்வாங்களே ஒன்லைன் அப்படித்தான் இருக்கும்.

- மனம் திறந்து பேசிய மம்முட்டி அடுத்தக் காட்சியில் நடிக்கத் தயாரானார். விடைபெற்றோம்.

சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்ல வேண்டும்-அமீர்

Friday, March 7th, 2008

1697cfb3eb98d1545e5a1981ca3.jpg5cb6a418dcf417b668465c80ecc9e6.jpg

மூன்றே படங்கள்தான் இயக்கியிருக்கிறார். அதற்குள்ளாகவே முத்திரை பதிக்கும் அங்கீகாரத்தைப் பெற்று விட்டவர் அமீர். “ராம்” படத்துக்காக சைப்ரஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றவர், இப்போது பெர்லின் படவிழாவில் `பருத்தி வீரன்’ படத்துக்கு விருது பெற்று வந்திருக்கிறார். விருது, மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் என்று களிப்பின் கதகதப்பில் இருந்த அமீருடன் ஒரு சந்திப்பு.

இந்த விருதுகள் பற்றி உங்களது கருத்து….?

ரொம்ப சந்தோஷமாக இருக்கு. மன நிறைவா இருக்கு. ராம் படத்தில் நடிப்புக்கும், இசையமைப்புக்கும் கிடைச்சது. பருத்தி வீரனுக்கு சிறந்த படம்கிற சிறப்பு விருது கிடைச்சது. பெர்லின் பட விழாவில் பருத்தி வீரனுக்கு கிடைத்துள்ள விருது, பெரிய அங்கீகாரம்.

உங்கள் படத்தை பெர்லின் பட விழாவிற்கு எப்படி அனுப்பினீர்கள்?

சொல்ல வந்ததை சரியாக சொல்லியிருக்கிறோம். யதார்த்தமாக பண்ணியிருக்கோம்கிற நம்பிக்கையில்தான் படத்தை அனுப்பி வைத்தோம். நம் வேலையை உண்மையா, நேர்மையா செய்திருக்கோம்கிற நம்பிக்கை எனக்கு இருந்திச்சு. அதுக்கு பலன் உண்டுன்னு நம்பினேன்.

அப்படியானால் விருதை மனதில் வைத்து படம் எடுத்தீர்களா?

நான் கமர்ஷியலா படம் வெற்றி பெறணும்னு மட்டும்தான் படம் எடுத்தேன். விருதுக்காக படம் எடுக்கலை. கமர்ஷியலாகவும் வெற்றிப் பெற்ற படத்துக்கு விருதும் தேடி வருவது சந்தோஷமான விஷயம்தான்.

விருது விழா அனுபவம் எப்படி இருந்தது?

பெர்லின் பட விழாவில் 3000 படங்கள் பங்கேற்றன. பல ஆசிய, ஐரோப்பிய நாடுகளின் படங்கள் திரையிடப்பட்டன. இந்தப் படங்களை 4 முக்கியப் பிரிவா பிரிச்சு, அதன்படி வரிசைப்படுத்துவாங்க. போட்டி பிரிவு, பனோரமா பிரிவு, போரம் பிரிவு, டேலண்ட் பிரிவு இப்படி பிரிவுகள் உண்டு. பருத்திவீரன் போரம் பிரிவில் கலந்துகொண்டது.

கலந்து கொண்ட 3000 படங்களில் 176 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் 36 படங்கள் போரம் பிரிவில் தேர்வு செய்யப்பட்டன. அதில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட ஒரே படம்  பருத்தி வீரன் மட்டுமே. 36 படங்களில் ஆசிய நாடுகளிலிருந்து சிறப்பு விருதுக்கு தேர்வான படம் பருத்தி வீரன் என்பதில், தமிழ்நாட்டுக்கும் பெருமைதானே.

வணிக வெற்றி, விருது வெற்றி எதை விரும்புகிறீர்கள்?

வணிக படங்கள் வேறு, விருதுப் படங்கள் வேறுன்னு பாகுபாடு எல்லாம் கிடையாது. வணிக ரீதியில் ஜெயிக்கிற படங்களும் விருது வாங்கும்ணு நம்பிக்கை வந்திருப்பது நல்ல அறிகுறிதான்.

`யோகி’-யில் நடிக்கும் அனுபவம் எப்படி?

இதுவரைக்கும் யோகி 40 நாள் படப்பிடிப்பு முடிஞ்சிருக்கு. கிட்டத்தட்ட பாதிப்படம் முடிஞ்சிருக்கு. இது சென்னை சேரி மக்களின் வாழ்க்கைப் பதிவா இருக்கும். காதலும், வீரமும், ஈரமும் கொண்ட இப்படத்தில், ஒரு பிச்சைக்காரனின் மகனா நான் நடிக்கிறேன். இதன் கதை, திரைக்கதை, வசனம் நான் எழுதறேன். சுப்ரமணிய சிவா டைரக்ட் பண்றார். என் கேரக்டரில் நடிக்க யாரும் முன் வரமாட்டாங்க. அதனால நானே நடிக்கிறேன். மதுமிதா தான் நாயகி. நிறைய புதுமுகங்கள் நடிக்கிறாங்க. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

எனக்கு தெரிஞ்ச தொழிலான சினிமாவை நாம சரியா செய்யணும்கிற ஆர்வம் எனக்கு உண்டு. வழக்கமான பாதையை விட்டு, புதுசா போகிற தாகம் உண்டு. மக்களுக்கும் நமக்கும் நேரடியான பாலமா அமையுற தொழில் சினிமா. அதனால்தான் சினிமாவை நான் நேசிக்கிறேன்.

யதார்த்த நடிப்பிற்கே பாராட்டு – சந்தியா

Friday, March 7th, 2008

8a14c564c8af418072b583f2bf51.jpg

காதல்’ படத்தின் மூலம் அறிமுகமான சந்தியா அடுத்தடுத்த படங்களின் மூலம் நம் விழியில் விழுந்து இதயம் நுழைந்தவராகி விட்டார். பள்ளி மாணவியாக அன்று அறிமுகமானவர் ஒரு குழந்தைக்குத் தாயாக ‘தூண்டில்’ படத்தில் நடிக்குமளவுக்கு முன்னேறி பாஸ்மார்க் வாங்கி இருக்கிறார்.

இனி சந்தியா…

ஒரு நடிகைக்கு முதல் பட வாய்ப்பு எந்த அளவுக்கு அவசியமானது?

எந்தத் துறையிலும் நல்ல தொடக்கம் அமைய வேண்டும். நல்ல ஆரம்பம் பாதி வெற்றி என்பார்கள். அந்த வகையில் ‘காதல்’ படம் எனக்கு அமைந்தது என்று சொல்லலாம். முதல் படம் பல வகையிலும் பேசப்பட்ட படம். எனக்கு எதுவும் தெரியாத நிலையில் டைரக்டர் பாலாஜி சக்திவேல் சொன்னதை நடித்துக் காட்டினேன். அவ்வளவுதான். அத்ற்கே என் நடிப்பு நன்றாக இருந்ததாக பாராட்டினார்கள் என்றால் பாருங்களேன்.

நாம் எவ்வளவுதான் சிரமப்பட்டு நடித்திருந்தாலும் அந்தப் படம் வெற்றி பெற்றால்தான் அது வெளியே தெரியும். இல்லையென்றால் பலனில்லை. என்னைப் பொறுத்தவரை என் முதல் படம் வெற்றிப் படமாக மட்டுமல்ல, பேசப்படும் படமாகவும் அமைந்ததில் நான் அதிர்ஷ்டசாலி என்றே சொல்ல வேண்டும். நான் பெரிய அளவில் ரசிகர்களைச் சென்று அடைந்திருக்கிறேன்.

ஒரு நடிகையாக உங்களை எப்படி தயார்படுத்திக் கொள்ள முயன்றீர்கள்?

முதல் படத்தில் எதுவுமே தெரியாது. போகப் போக கேமரா எங்கிருக்கிறது, நாம் எங்கே இருக்கிறோம், எங்கு லைட் வருகிறது என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள ஆர்வம் வந்தது. அவற்றை அறிந்து கொள்வது சினிமாவுக்கு அடிப்படையான விஷயங்கள் என்று புரிந்தது. முதல் படத்தில் இந்த அடிப்படை விஷயங்கள் தெரியாமல் இருக்கலாம். எல்லாப் படத்திலும் தெரியாது என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? அதனால் சிலவற்றை பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டேன்.

நடிப்பை மெருகேற்ற என்ன செய்கிறீர்கள்?

நிறைய படங்களைப் பார்க்கிறேன். பழைய படங்களைப் பார்த்தால் நிறைய கற்றுக் கொள்ளலாம் என்றார்கள். பழையது, புதியது என்று எல்லாமே பார்ப்பேன். ஆனால் பழைய படங்களைப் பார்க்கும்போது ஒன்று புரிகிறது. நடிப்பு களத்துக்குக் களம் மாறி வருகிறது. அன்றைக்கு மாதிரி இன்று நடிக்க முடியாது. படங்களைப் போல நடிப்பும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. நடிப்பு என்பதே தெரியாமல் நடிப்பதே இன்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி யதார்த்தமாக நடிப்பதே பாராட்டப்படுகிறது.

தமிழில் பெரிய அளவில் வலம் வருவதற்குள் தெலுங்கு, மலையாளம் என்று போனது ஏன்?

நல்ல வாய்ப்பு எங்கு வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். அப்படியாவது ஒரு திருப்தி கிடைக்கட்டுமே என்றுதான் நடித்தேன். தெலுங்கில் சமீபத்தில் ‘அன்னாவரம்’ என்கிற படத்தில் பவன் கல்யாண் தங்கையாக நடித்தேன். ஆனால் அதற்குப் பிறகு பல படங்களில் அதே போல தங்கை வேடத்துக்கே கூப்பிடுகிறார்கள். தமிழிலும் தெலுங்கிலும் இது ஒரு சங்கடம்.

ஏதாவது ஒரு கேரக்டரில் வெற்றி பெற்று விட்டால் தொடர்ந்து அதே மாதிரி கேரக்டரையே கொடுப்பார்கள். ஆனால் மலையாளத்தில் அப்படியில்லை. படத்துக்கு படம் வித்தியாசமாக பார்க்கவே விரும்புவார்கள்.

மலையாளத்தில் ‘சைக்கிள்’ என்றொரு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் என் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த திருப்தியில் அடுத்து விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் உருவாக்கும் புதிய மலையாளப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். இதில் ‘ரன்’ படத்தில் நடித்த அதுல் குல்கர்னியுடன் நடிக்கிறேன். வித்தியாசமான கதையாக இருக்கும்.

‘தூண்டில்’ படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளது பற்றி…?

நான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டபோதே சிலர் கேட்டார்கள். அதற்குள் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறாயா? யோசித்துதான் முடிவெடுத்தாயா என்றார்கள். அப்புறம் உன்னை அம்மா கேரக்டருக்கே கூப்பிடுவார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். இன்னொரு கதாநாயகியும் இருக்கிறார் என்றார்கள். ‘தூண்டில்’ படம் பற்றி யோசித்து முடிவெடு என்றார்கள். அந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தது. டைரக்டர் மீது நம்பிக்கை இருந்தது. துணிச்சலாக முடிவெடுத்து நடித்தேன். இப்போது படம் பார்த்த எல்லாரும் பாராட்டுகிறார்கள்.

எனக்குப் பிடித்த அழகான ஆண் அஜீத் – திரிஷா

Wednesday, March 5th, 2008

73e3a81a75380c25a390096171b.jpgb608f58de8aa0fa7287a8ca9ad19.jpg

நடிக்கவே வேண்டாம்; திரையில் வந்தாலே போது திரிஷா. திரி கொளுத்தப்பட்ட பட்டாசாக வெடிக்கிறார்கள் ரசிகர்கள். அப்படிப்பட்ட வசீகரத் தோற்றம் அவருக்கு.

முன்னணி நாயகர்களுடன் முதல் சுற்றை வெற்றிகரமாக முடிந்துள்ளவர், தற்போது அடுத்த சுற்றுக்குத் தயாராக இருக்கிறார். ‘பீமா’, அதைத் தொடர்ந்து ‘குருவி’, ‘அபியும் நானும்’. தொடர்ந்து வரிசையாக படங்கள் திரிஷாவுக்கு.

அவரிடம் கேள்வித் திரியை கிள்ளிப்போட, பட்டாசாக பதிலில் வெடிக்கிறார் திரிஷா. இனி அவருடன்…

‘பீமா’வில் கொஞ்சம் நடிக்கவும் ஆர்வப்பட்டிருக்கிறீர்களே?

சினிமாவில் ஹீரோயிசம்தான் ரசிக்கப்படுவதாகவும், பேசப்படுவதாகவும் ஒரு கருத்து இருக்கு. பெரும்பாலான படங்கள் ஹீரோ ஓரியண்டடாகத் தான் இருக்கு. சில படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.

‘பீமா’வில் என்னை அழகாக காட்டவும் செஞ்சிருக்காங்க. நடிக்கவும் வச்சிருக்காங்க. அது இயக்குனர் கையிலதான் இருக்கு.

கிளாமர் ஹீரோயின் இமேஜ் எத்தனை நாளுக்குத் தான் உதவும்?

எனக்கும் அந்த பயம் இருக்கு. அதனால் என் பயணமும் படமும் இப்போ மாறியிருக்கு. தோற்றத்தைப் பார்த்து விசிலடிச்சா போதாது. நடிப்பையும் ரசிச்சு மனசுக்குள் வச்சிருக்கணும். அப்படி இதயம் தொடுற படங்களில் நடிக்க எனக்கும் விருப்பம் இருக்கு.

சிம்ரன் கூட கிளாமரா இருந்துவிட்டு நடிப்பில் அசத்தியவர் தானே?

சிம்ரனின் கிளாமரில் கிறங்காதவர்களே இல்லை. அப்படிப்பட்டவர் ‘வாலி’ படத்தில் அசத்தினார். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் கலக்கினார். அதுபோல

‘அபியும் நானும்’ படம் எப்படி வந்திருக்கு?

பிரகாஷ்ராஜ் எடுக்கும் படம் ஒவ்வொண்ணும் பேசப்படுது. அவரது ‘மொழி’ படத்தில் ஜோதிகா நடிச்சது எவ்வளவு பெரிய விஷயம். எனக்கும் இப்படி ஒரு வித்தியாசமான படம் தேவைப்படுது.

அப்போது தான் பிரகாஷ்ராஜ் கூப்பிட்டார். கதை பிடிச்சிருந்தது. இதுதான் நான் ஆசைப்பட்ட கதைன்னு மனசு சொல்லிச்சு. இது, என் கேரியர்ல முக்கியமான படமா இருக்கும். இதை மட்டும் இப்போ சொல்ல முடியும்.

இடையில் தெலுங்கு படங்களில் நடிக்கப் போனது ஏன்?

தமிழில் நல்ல கதையை எதிர்பார்த்து நான் காத்திருந்தபோது தெலுங்கு பட வாய்ப்பு வந்தது. வேற கிரவுண்டில ஆடிப்பாக்கலாம்னு ஆசையில நடிச்சேன்.

தெலுங்குல எவ்வளவு கிளாமர் ஹிரோயின்கள் இருக்காங்க. இருந்தாலும் எனக்கும் இடம் கொடுத்தாங்க. அதனால தொடர்ந்து சில தெலுங்கு படங்களில நடிச்சேன். அவை வெற்றிப் படங்களா அமைஞ்சிடிச்சு. அதனால உடனே திரும்பி வர முடியல. இப்போ தமிழுக்கு வந்துட்டேன்.

நயன்தாரா எல்லாம் முழுவீச்சில் கிளாமரில் இறங்கி விட்டார். நீங்கள் பாதை மாற நினைக்கிறீர்களே?

நான் ஓரளவுக்கு கிளாமர் பண்ணிட்டேன். இதற்கு மேல என்னால் முடியாது. ‘பில்லா’வில நமீதா, நயன்தாரா ரெண்டுபேரின் கிளாமரையும் ரசிச்சேன். இந்த விஷயத்தில் சிம்ரனை உதாரணமாகவச்சி மாற விரும்புகிறேன்.

உங்களுக்கு பிடித்த கதாநாயகர்கள் விக்ரம், விஜய், அஜீத் என்பீர்கள். இதில் மாற்றமுண்டா?

விஜய், விக்ரம் இருவருக்கும் நான் பொருத்தமான ஜோடி; ராசியான ஜோடின்னு பலரும் சொல்றாங்க. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். இவங்க ரெண்டு பேரோடும் ஜோடி சேர்ந்தா கச்சிதமான ஜோடியா பேசப்படுறேன். அஜீத் எனக்குப் பிடிச்ச அழகான ஆண். அதில் எந்த மாற்றமும் இல்லை.

`பளிச் பளிச்’ பதில்களோடு விடை பெறுகிறார் ஐஸ்கிரீம் அழகு திரிஷா.

Sunday, March 2nd, 2008

Production: Kiccha
Story, Screenplay, Dialogues and direction: Kiccha
Star-casts: Sathyaraj, Megha Nair, Goundamani, Shanmugharajan and many others.
Music: Srikanth Deva

thangam1pf9.jpg

Age factors don’t seem to be a great obscure for Sathyaraj and he seems to be cool performing various roles churning out film to film. If he had come up with an exceptional role of a 60 year old man, this flick presents him as a normal hero that’s appealing for masses…

With a simple and already seen script, Thangam is nothing special of its kind, but it’s just a thing that makes it highlighted, comedian Goundamani. This veteran ace comedian backs with an extraordinary comedy tracks and moreover Kiccha perfectly adds the necessary elements of a perfect entertainer…

The story of Thangam goes this way…

The film opens with Thangam (Sathyaraj) getting freed from prison and returning to his hometown. On his way to home back, the flashback what made Thangam to be put behind bars? Delhi Kumar and ‘Pithamaghan’ Mahadevan are good friends who have earned good respects in the village due to their care of well being of village people. Thangam is the son of Delhi Kumar and Mahadevan’s son is Shanmugarajan, but they aren’t friends as their fathers. Shanmugarajan is an evil doer and gets punished by Thangam during most of the times when he attempts for something bad. Waiting for a right chance, Shanmugarajan has his evil deed casted on Thangam is sent behind the bars. After returning from prison after punishment period, Thangam has to face another shock and that’s death of his younger sister for whom he had sacrificed many things… Thangam’s uncle (Goundamani) reveals what had happened to him when he was behind the bars… Soon Thangam vows to take seek revenge on the entire family that had made their lives gloomy….

thangamdj2.jpg

Kiccha exerting same tempo for the flick wins the laurels, but he is a looser when he misses out of logical aspects. Though filled with lots of absurdities, the entertaining factors doesn’t make audiences’ attention from getting scattered…

Goundamani remains as main limelight right from the beginning till the climax striking with rib-trickling comedy tracks along with Sathyaraj. Megha Nair does justice to her job performing the best and that goes well with other performers too.

Thangam gets back the audience inserting in them a feel of watching a good movie made before a decade like Maman Magal, Pangali and many others…

Srikanth Deva has tuned melodies of his own kind and seems like he has been concentrating only on background scoring…

On the whole, Thangam is a movie that can be watched along with family members to enjoy killing your time. If you felt all over the week with hectic works, you can watch this movie relaxing during the weekend…

Bottom Line : appealing entertainer for massesVerdict: A good entertainer…

ஃ – தமிழ் சினிமாவில் புது முயற்சி

Sunday, March 2nd, 2008

ss.jpg

அஜய், ஸ்ரீஜி, அனுஹாசன், ரியாஸ்கான், ரக்‌ஷை, ராம்கான், ஜெயஸ்ரீ, பிஜு, லட்சுமி, ஹாரிஸ் நடிப்பில் சிட்டிபாபு ஒளிப்பதிவில், ஸ்ரீராம் இசையில் மாமணி இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஆன் லைன் நெட் ஒர்க்.

தமிழில் தலைப்பு வைக்கவே தயங்கியவர்களின் மத்தியில் ‘ஃ’ என்று யாரும் பயன்படுத்தாத ஆயுத எழுத்தை பெயராக வைத்த துணிச்சலை முதலில் பாராட்ட வேண்டும். பெயரைப் போலவே படமும் துணிவான முயற்சிதான்.

தீவிரவாதியாக நடிக்கும் ரக்‌ஷை, தன் தங்கை ஸ்ரீஜியை காதலிக்கும் நாயகன் அஜயை வெறுக்கிறார். இதன் காரணமாக மனம் வெறுத்த காதல் ஜோடிகள், சாவில் இருவரும் நாம் இணைவோம் என்று தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள்.

விஷம் அருந்த முடிவெடுத்த பின், கடைசி நொடியில் வாழ ஆசை வருகிறது. முடிவை மாற்றிக் கொள்கிறார்கள். தனிமையில் இருவரையும் பார்த்த ரக்‌ஷையின் ஆட்கள் ஸ்ரீஜியை கண் காணாத இடத்தில் சிறை வைக்கிறார்கள்.

இதோடு நின்றுவிடாமல், “நீ சாதாரணமாக பொசுக்கென்று சாகக் கூடாது. அணு அணுவாக சாக வேண்டும்” என கூறி நாயகன் அஜய் ஷூவில், வெடிகுண்டை பொருத்தி விடுகிறார் ரக்‌ஷை.

“ஓடிக்கொண்டே இரு, நின்றால் சிதறி விடுவாய்” என ரக்‌ஷை எச்சரிக்க, ஓடுகிறார்… ஓடுகிறார்… அஜய் ஓடிக் கொண்டே இருக்கிறார். முடிவு என்ன என்பதே மீதிக்கதை.

படத்தின் தொடக்கத்தில் தீவிரவாதியின் நடவடிக்கைகள், இரு காதலர்களின் அன்யோன்யம் இவற்றைக் காட்டுகிறார்கள். அஜய்யின் காலில் எப்போது வெடிகுண்டு பொருத்தப்படுகிறதோ அந்த வினாடியில் இருந்து நம்மை பரபரப்பும் படபடப்பும் பற்றிக் கொள்கிறது. படமும் ‘விர்’ ஆகிறது

ss23.jpg

இப்படிப்பட்ட சூழலில் சம்பந்தப்பட்டவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் குண்டு வெடிப்பின் மூலம் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று காவல்துறையும் திட்டமிடுகிறது.

இதுமாதிரி இக்கட்டான சூழ்நிலையில் மக்களைக் காப்பாற்ற காவல்துறை மேற்கொள்ளும் அறிவுபூர்வமான, பொறுப்பான, விரைவான நடவடிக்கைகள் திட்டங்கள் பற்றி நேர்த்தியான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் மாமணி.

இந்தப் பரபரப்பை ‘லைவ்’ ரிலே செய்து டிவி சேனல்கள் பெயரெடுக்கத் துடிக்கும் இன்றைய மீடியாவின் வேகத்தையும் காட்டியுள்ளார்.

நாயகன் அஜய். நாயகி ஸ்ரீஜி. வில்லன் ரக்‌ஷை. பாம் ஸ்குவாடு ஆபீசர் அனுஹாசன். ரியாஸ்கான் அசிஸ்டெண்ட் கமிஷனர். ராம்கான் இன்ஸ்பெக்டர். கதையின் போக்கும் ஓட்டமும் விறுவிறுப்பாக இருப்பதால் யார் முகமும் முன்னுரிமை பெறவில்லை. கதையோடு சேர்ந்து எல்லாருமே பயணிக்கிறார்கள்.

பெரும்பாலும் புதுமுகங்களைத் தேர்வு செய்திருக்கும் முயற்சியே படத்துக்கு பெரிய அனுகூலமாக இருக்கிறது. சினிமா என்பதை மறக்கடிக்கிறது. ஒளிப்பதிவும் இசையும் நல்ல தேர்வு+நேர்த்தி.

ஆங்கிலப் படத்துக்கு இணையாக புதிய முயற்சியில் படம் பரபரக்கிறது. படத்தில் உள்ள சிறு சிறு குறைகளை பெரிதுபடுத்தி இதுமாதிரி துணிவான தெளிவான முயற்சி செய்யும் இளைஞர்களை சோர்வடையச் செய்துவிடக் கூடாது. இயக்குனர் மாமணியை தட்டிக் கொடுத்துப் பாராட்டலாம், தாராளமாக. வாழ்த்துகள்!